உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாம்பன் ரோடு பாலத்தில் இரும்பு பிளேட் சேதம்: விபத்து அபாயம்

பாம்பன் ரோடு பாலத்தில் இரும்பு பிளேட் சேதம்: விபத்து அபாயம்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில், 'பிங்கர் ஜாயின்ட்' இரும்பு பிளேட் சேதமடைந்துள்ளதால், சுற்றுலாப்பயணியரின் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.பாம்பன் கடலில் 1988ல் கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலை பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த பாலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணி செய்யப்படுகிறது. பாலம் நடுவில் இரு இடங்களில் பிங்கர் ஜாயின்ட் இரும்பு பிளேட் பொருத்தியுள்ளனர்.இந்த பிளேட் அடிக்கடி சேதமடையும் நிலையில், ஜனவரியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரசாயன கலவையை பூசி சரி செய்தனர். இந்நிலையில் மீண்டும் இரும்பு பிளேட் சேதமடைந்து, இதனுள் உள்ள இரும்பு போல்ட்கள் வெளியில் நீண்டபடி உள்ளன. இதனால், வாகன டயர்கள் சேதமடைவதுடன் விபத்து அபாயமும் உள்ளது. மேலும் வாகனங்கள் இரும்பு பிளேட்டை கடக்கும் போது, 'தடதட' என பெரும் சத்தத்துடன் அதிர்வு ஏற்படுவதால், பாலத்தில் விபரீதம் நடக்கிறதோ என்ற அச்சத்தில் மக்கள் வாகனங்களில் கடந்து செல்கின்றனர்.கடந்த 2010 வரை வெண்கலத்தில், பிங்கர் ஜாயின்ட் பிளேட் இருந்த போது பிரச்னை ஏதுமில்லை. இரும்பு பிளேட் பொருத்திய பின் 5 முதல் 6 மாதத்திற்கு ஒரு முறை சேதமடைந்து விடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி