உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரிட்டன் பிரதமர் வெற்றிக்கு தி.மு.க., வின் யோசனை உதவியதா?

பிரிட்டன் பிரதமர் வெற்றிக்கு தி.மு.க., வின் யோசனை உதவியதா?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cofuwmit&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இன்றைய நிகழ்ச்சியில்

பிரிட்டன் பொது தேர்தலில், தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்த தொழிலாளர் கட்சி தலைவர் கேர் ஸ்டாமர், அந்நாட்டின் பிரதமராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.தொழிலாளர் கட்சியின் தேர்தல் அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் செயல்படுத்தி உள்ள, 'முதல்வரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், கருணாநிதி கனவு இல்லம் திட்டம்' இடம் பெற்றிருந்ததாகவும், பிரிட்டன் தேர்தலில் அக்கட்சி வெற்றிக்கு இதெல்லாமே முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.பிரிட்டனில் புதிய பிரதமர் ஸ்டாமர் வெற்றியின் ரகசியத்தை திமுகவிடம் திருடினாரா? என்பது குறித்து விவாதம் நடந்தது.இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.https://www.youtube.com/watch?v=amgoSJ0MO5w


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Kalyanaraman
ஜூலை 10, 2024 07:45

திமுகவே பல மத்திய அரசின் திட்டங்களுக்கு தங்களது பெயரை சூட்டிக்கொண்டு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கின்றனர். இதில் இவர்களைப் பார்த்து ஒருவர் காப்பியடிக்க வேண்டுமா? காமெடிக்கு ஒரு அளவே இல்லையா??


Nagercoil Suresh
ஜூலை 09, 2024 03:15

நம்முடைய தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கியத்திலிருந்து வளர்ந்த பல நாடுகளில் இது குறித்து பேசப்படுவது உண்மை தான், இந்த திட்டம் பல நாடுகளில் உற்றுநோக்கப்படுகிறது ஆனால் நிதி இல்லாமல் விழிபிதுங்கி காணப்படுகிறார்கள். வளர்ந்த நாடுகளில் ஏழை பணக்கார குழந்தைகள் என பிரித்து பார்க்கப்படுவது கிடையாது இந்த திட்டம் வரும் காலங்களில் பல நாடுகளில் இது துவங்கப்படும், மக்கள் தொகை குறைத்துக்கொண்டு செல்லும் நாடுகளில் இந்த திட்டம் அரசியல் ஆதாயத்தை பெற்று தரும். இன்னும் 200 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 500 - 600 கோடிகளாக குறையும் அடுத்த 500 ஆண்டுகளில் 300 - 400 கோடிகளாக சரியும் என கணிக்கலாம் இதை சரிக்கட்ட அந்தந்த நாட்டு அரசுக்கள் பல உதவிகளை வாரி வழங்கி மக்கள் தொகையை பெருக்க முயற்சிக்கும். பிரிட்டன் தேர்தல் வெற்றி மக்களுக்கு ஆளும் கட்சியின் மேல் உள்ள சலிப்பு தான் முக்கிய காரணம் அதை விட்டு விட்டு தமிழகத்தின் ஐடியா தான் காரணம் என கூறினால் நம்முடைய தொப்பியின் மேல் வைத்த இதழாக கருதி மகிழ்ச்சி அடையவேண்டியது தானே....


Rpalnivelu
ஜூலை 08, 2024 07:57

ஊழலிலும் சாராயத்தாலும் கொள்ளையடித்த லட்சக்கணக்கான கோடிகைகளை கொண்டு தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்களை வளைத்து விட்டார்கள். போதாதற்க்கு கூட்டணி கட்சிகளை அடக்கியாகி விட்டு, தற்போது பிரதானமான கட்சியை டெட்பாடியைக் கொண்டு அமுக்கியாகி விட்டது. மக்களை இலவசத்துக்கும் சாராயத்துக்கும் அடிமையாக்கியதும் ஒரு சாதனை. தேச பிரிவினைவாதம், கொலை மாநிலமாக்கியது, பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் இமாலய சாதனை. கேட்பாரும் இல்லை மேய்ப்பாரும் இல்லையென்று தமிழகம் தறிக்கெட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரே விடி வெள்ளி புதிய அண்ணாதான்


tmranganathan
ஜூலை 07, 2024 19:48

ஏன் பேத்தி லண்டனில் படிக்கும்போது அங்கே காலை ம்தியம் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இது பத்தாண்டுகளுக்கு முன்னரே நடந்த விஷயம். ஓங்கோலனும் அடொமைகளும் பொய்யாய் அல்ல வீசுகிறார்கள்.


என்றும் இந்தியன்
ஜூலை 07, 2024 17:36

WOW Excellent மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் கயிறு இல்லாமல் முடிச்சு போடுவது எப்படி என்பது போல இருக்கின்றது இந்த உளறல்


S. Gopalakrishnan
ஜூலை 07, 2024 15:52

அடுத்து நம்மவர் உக்ரைன் போரை நிறுத்தவும், காஸா போரை நிறுத்தவும் கிளம்பி விடுவார் !


Manikandan
ஜூலை 07, 2024 22:30

அதற்கு தான் தானைத்தலைவன் வாயில் வடை சுடும் மோடி இருக்கிறாரே தலை


Sainathan Veeraraghavan
ஜூலை 07, 2024 15:41

திமுக உடன் பிறப்புகள் எல்லோருமே கூலிக்கு கூவுபவர்கள்.


Barakat Ali
ஜூலை 07, 2024 15:28

உண்மை செருப்பணிந்து புறப்படுவதற்குள், பொய் உலகைச் சுற்றிவிட்டு வந்துவிடுகின்றது ..... இது ஒரு அயல்நாட்டுப் பழமொழி .......


Barakat Ali
ஜூலை 07, 2024 15:20

உலகுக்கே வழிகாட்டுவது எங்கள் திராவிட மாடல் ...... உ பீயிஸ் பெருமிதம் .......


chennai sivakumar
ஜூலை 07, 2024 15:04

நீங்கள் உருட்டல்களின் லேட்டஸ்ட் அப்டேட் தெரிந்து கொள்வதற்காக செய்தி போடப்பட்டது. ஹி ஹி


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை