உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., நிர்வாக இயக்குனரா பழனிசாமி? கவர்னரை சந்தித்த பின் ஹெச்.ராஜா கேள்வி

அ.தி.மு.க., நிர்வாக இயக்குனரா பழனிசாமி? கவர்னரை சந்தித்த பின் ஹெச்.ராஜா கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அ.தி.மு.க.,விற்கு சேர்மன் ஆகவும், நிர்வாக இயக்குனராகவும் பழனிசாமி செயல்படுகிறாரா,'' என, தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.அரசியல் தொடர்பான உயர் கல்வி படிப்பதற்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, லண்டன் சென்றுள்ளார். நவம்பர் மாதம் வரை அங்கு கல்வியை தொடரவுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1h9iweve&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், தமிழகத்தில், பா.ஜ., தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு, ஆறு பேர் கொண்ட குழுவை, அக்கட்சி தேசிய தலைவர் நட்டா நியமித்துள்ளார். அதன் ஒருங்கிணைப்பாளராக ஹெச்.ராஜா நியமிக்கப்பட்டு உள்ளார். கவர்னர் ரவியை நேற்று, ஹெச்.ராஜா சந்தித்து, ஒன்றரை மணி நேரம் பேசினார்.பின், ஹெச்.ராஜா அளித்த பேட்டி:எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, செந்தில் பாலாஜி ஊழல்வாதி என முதல்வர் ஸ்டாலின் முத்திரையிட்டு சான்றளித்தார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார் என்றும் கூறினார். அது தற்போது நடக்கிறது. ஆண்டவனே அதை நடத்தி காட்டியுள்ளார். கார் பந்தயம் விளையாட நினைப்பவர்கள் விளையாடுகின்றனர். அதில், பங்கேற்பவர்களுக்கு என் வாழ்த்துகள்.நடப்பாண்டு மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில்வே பணிகளுக்கு 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில், 10.6 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், 2004 முதல் 2014 வரையிலான காங்., ஆட்சியில் குறைந்த நிதிதான் வழங்கப்பட்டது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். நொண்டி குதிரைக்கு சறுக்கினது சாக்கு என்பர். ஊழலையும், கையாளாகாத தனத்தையும் மூடி மறைக்க, மத்திய அரசு மீது குறை கூறுகின்றனர். பா.ஜ., கார்ப்பரேட் வடிவில் நிர்வாகிகளை நியமித்துள்ளதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார். அப்படியானால், அ.தி.மு.க.,விற்கு சேர்மன் ஆகவும், நிர்வாக இயக்குனராகவும் பழனிசாமி செயல்படுகிறாரா என்பதையும் அவர் விளக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Shyam Venkat
செப் 02, 2024 18:20

அப்படி பாக்கணும்னாத் ஸ்டாலின் கூட ஓல்ட் ஸ்டுடென்ட் தான்


கோவிந்தராசு
செப் 02, 2024 15:26

இருப்பை காட்ட எதாவது கூறனும் நீ ஒருடம்மி பீஸ்


பாமரன்
செப் 02, 2024 08:49

பாண்டு ஜீரோ ஜீரோ ஜீரோ கூட பழைய சிரிப்பு போலீஸை இவ்ளோ நேரம் சந்திச்சு பேசலை... நம்மாளுக்கு மூன்று மாதம் கெஸ்ட் ரோல் தான் காமெடிக்கு... இவர் ஒரிஜினல் தான் நல்லாயிருந்தது.... பாவம் ஆடு வேஷம் நல்லாவே இல்லை...


T.sthivinayagam
செப் 02, 2024 08:08

ரஜினி சொன்ன ஒல்டு ஸ்டுடன்ட் பற்றி இப்பதான் புரிகிறது


அப்பாவி
செப் 02, 2024 06:36

ஏன்? கெவுனரை சந்திக்கிறது முன்னாடி கேட்கக் கூடாதாக்கும்? இல்லை கெவுனர் கேக்ஜச் சொன்னாராக்கும்? இவிங்க வேலை இப்போ அதிமுக வை உடைச்சு வீக்காகறது போலிருக்குது.


Kasimani Baskaran
செப் 02, 2024 05:24

இரட்டை இலையில் உள்ள தண்டை பிடித்து வைத்துக்கொண்டு இரண்டு இலைக்கும் நாங்கள்தான் உரிமையாளர்கள் என்று எடப்பாடி கோஷ்டி சொல்லித்திரிகிறது. பன்னீரும் ஏ2 வும் ஆளுக்கு ஒரு இலை விகிதத்தில் வைத்திருப்பது இவர்களுக்கு தெரியாதது துரதிஷ்டம். ஆக திராவிட ஒழிப்பு தொகுப்பு ஒன்று சிறப்பாக நிறைவேறி இருக்கிறது. ஒன்றுக்கு மாற்று இன்னொன்று அல்ல என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 02, 2024 07:22

அக்சர் படேல் வெளியே இருந்தால் ஊழல் வாதி பிஜேபி யில் சேர்ந்து விட்டால் வாஷிங் மெஷின் இது இந்த ராஜாவுக்கு தெரியுமா