உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிளாட் போடப்பட்டதா கடற்கரை? சுற்றுச்சுவருடன் கட்டுமானம் ஜோர்!

பிளாட் போடப்பட்டதா கடற்கரை? சுற்றுச்சுவருடன் கட்டுமானம் ஜோர்!

சென்னை: சென்னையில், மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரையை போல், இ.சி.ஆர்., பகுதியில் உள்ள கடற்கரைகளும், பொழுதுபோக்கு இடமாக மாறி வருகிறது.குறிப்பாக, நீலாங்கரை முதல் பனையூர் வரை உள்ள ஒவ்வொரு தெருக்களும், கடற்கரையில் முடிகின்றன. இதனால், பொதுமக்கள் இங்கு அதிகம் செல்கின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் வந்து செல்லும் உத்தண்டி, சீசோர் அவென்யூ கடற்கரையில் அத்துமீறி கட்டுமான பணி நடக்கிறது. கடல் அலையில் இருந்து, 10 அடி துாரத்தில், சுற்றி காம்பவுண்ட் எழுப்ப, மணலில் குழி தோண்டி கான்கிரீட்டால் தரை பலப்படுத்தப்பட்டு உள்ளது. மற்றொரு திசையில் கம்பி கட்டி, சுவர் எழுப்பும் பணி நடக்கிறது. கடற்கரையில் இருந்து, 500 மீட்டர் தொலையில் எந்த கட்டுமான பணிகளும் நடக்கக்கூடாது என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதை மீறி கட்டடம் கட்டுவது, கடற்கரை பாதுகாப்புக்கு கேள்விக்குறியாகி விடும் எனவும், இதை தடுத்து நிறுத்தக் கோரி மாநகராட்சி மண்டல அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும், பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து, பகுதிமக்கள் கூறியதாவது:உத்தண்டி கடற்கரையில் கட்டுமான பணி நடக்க போவதாக அறிந்த உடனே, மாநகராட்சி உதவி செயற்பொறியாளரிடம் புகார் தெரிவித்தோம். அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. கட்டுமான பணி துவங்கியதும், மீண்டும் கூறினோம். அப்போதும் பொறியாளர்கள், எந்த பதிலும் கூறாமல் மெத்தனமாகவே இருந்தனர். சம்பவ இடத்தை சாதாரண மக்கள் பார்வையிட்டாலே அப்பட்டமான கடற்கரை ஆக்கிரமிப்பு என தெரிந்துவிடும். மண்டல பொறியாளர்களுக்கு எப்படி தெரியாமல் போனது என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. எனவே, மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு, கடற்கரை கட்டுமானத்தை இடித்து அகற்றுவதோடு, சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்டுமானத்தை அகற்றுவதற்கு ஏற்படும் அனைத்து செலவையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளே ஏற்க வேண்டும். மீண்டும் இது போல், வேறு எங்கேயாவது கட்டுமான பணி நடக்கிறதா எனவும் ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மண்டல அதிகாரிகளிடம் கேட்டபோது, 'புகார் வந்தது உண்மை தான். சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்யவில்லை. கட்டுமான பணி நடந்தது உண்மையென்றால், அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Kavi
ஜூன் 30, 2024 13:11

Vidiyala vidiyavum vidiyadu


paulson wesly
ஜூன் 30, 2024 13:05

அரசு சம்பளம் வாங்கும் நீங்கள் கொஞ்சம் மனசாட்சியுடன் பணி செய்ய வேண்டும், சாதாரண பாமர மக்கள் செய்தால் விட்டு வீர்களா?


Shekar
ஜூன் 30, 2024 11:19

என் வீடு என் பெயர்லதான் இருக்கா, அப்படின்னு மணிக்கொருதரம் செக் பண்ணனும் போல் இருக்கிறது.


ஆரூர் ரங்
ஜூன் 30, 2024 11:07

மருமகன் கைவரிசை ன்னு சொல்லுகிறார்கள்


SIVA
ஜூன் 30, 2024 11:02

கம்யூனிஸ்ட்கள் ஒரு தண்டசோறு என்று காட்டி கொடுத்தது மட்டுமே திராவிட மாடலின் சாதனை ....


vadivelu
ஜூன் 30, 2024 07:59

தமிழகத்தில் இப்போது எந்த தவறும் நடப்பதில்லை, சாலைகள் நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கின்றன. எந்த விதமான போராட்டங்களும் நடப்பதில்லை. மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். சினிமா கலைஞர்கள் அவர்களின் தொழிலை மட்டுமே பார்த்து கொண்டுள்ளார்கள். ஒரு சிறு தவறு நடந்தாலும் ஊதும் கம்யூனிஸ்டுகள் வேலை இன்றி இருக்கிறார்கள். மீடியாக்கள் செய்திகளை மற்ற நாடுக்ளிலும், மாநிலங்களிலும் தேடி தேடி விவாதம் நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதுதானே மக்களுக்கு தேவை.


Kasimani Baskaran
ஜூன் 30, 2024 07:21

நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பது ஒரு கலை. செயற்கைகோள் மூலம் கண்காணித்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கவேண்டியது அவசியம்.


sridhar
ஜூன் 30, 2024 07:16

எவ்வளவு நாள் தான் வெறும் மணல் திருடுவது, மணல் இருக்கும் நிலத்தையே திருடலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள், ஆட்சி நம் கையில் தானே.


R S BALA
ஜூன் 30, 2024 06:19

வேற யாரு இதெல்லாம் செய்வாய்ங்க அதுவும் பொதுமக்களுக்கு தெரியும்தானே..


Duruvesan
ஜூன் 30, 2024 05:24

Gsquare


மேலும் செய்திகள்









புதிய வீடியோ