உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பீர் விற்பனை குறைவதற்கு கஞ்சா அதிகரிப்பு காரணமா?

பீர் விற்பனை குறைவதற்கு கஞ்சா அதிகரிப்பு காரணமா?

சென்னை: டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை குறைந்து வருவதற்கு, போதை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு காரணமா என்ற சந்தேகம் எழுந்துஉள்ளது.டாஸ்மாக் கடைகளில் தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய் மதிப்பிலான, 60,000 பெட்டி பீர் வகைகளும்; 1.80 லட்சம் பெட்டி மது வகைகளும் விற்பனையாகின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, சமீப காலமாக பீர் விற்பனை மாதந்தோறும் சராசரியாக, 4 - 5 லட்சம் பெட்டிகள் குறைந்து வருகிறது. கடந்த ஆகஸ்டில் பீர் விற்பனை, 30.51 லட்சம் பெட்டிகளாக இருந்தது. இது, 2023 அதே மாதம், 34.55 லட்சம் பெட்டிகளாக அதிகரித்திருந்தது. இந்தாண்டு ஜூலையில் பீர் விற்பனை, 30.65 லட்சம் பெட்டிகளாக இருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டில், 56.67 லட்சம் பெட்டிகளாக இருந்த மது வகைகள் விற்பனை, இந்தாண்டு ஆகஸ்டில், 57.57 லட்சம் பெட்டிகளாக சற்று அதிகரித்துள்ளது. பீர் விற்பனை குறைவது குறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:மது கடைகளில் பீர் வாங்குவதில் இளம் வயதினர் தான் அதிகம் உள்ளனர். தற்போது, கஞ்சா, குட்கா, மாவா உள்ளிட்ட போதை பொருட்களை இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். விரும்பி வாங்கப்படும் பீர் வகைகளை, மாவட்ட மேலாளர்கள் கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு அனுப்புவதில்லை. இதுபோன்ற காரணங்களால் தான், பீர் விற்பனை குறைகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

முறைகேடாக விற்பது தடுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளச்சாராய உயிரிழப்புக்கு பின், மதுக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. இதனால், மது கடைகளில் இருந்து மொத்தமாக வாங்கி, முறைகேடாக விற்பது தடுக்கப்பட்டுள்ளது. இதுவே, பீர் விற்பனை குறைவிற்கு காரணம். - பொதுமேலாளர் டாஸ்மாக்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ரஞ்சன்சிங்
செப் 10, 2024 16:13

கஞ்சா விற்பனை அதிகமாயிடுச்சா... அரசே கஞ்சா விற்பனையை ஏற்று நடத்தணும். விடியல் போயிருக்கும் அமெரிக்காவில் லீகலாகவே கஞ்சா வாங்கலாம். ஆனா அரசு விக்காது.


சமூக நல விரும்பி
செப் 10, 2024 11:50

பீர் விற்பனை அதிகரிக்க ரேஷன் கடைகளில் டோக்கன் கொடுக்கலாம். திராவிட மாடல் அரசு சமூக நீதி என்றும் அரசு டாக்டர் பரிந்துரைப்படி பீர் உடல் நலம் பெற டோக்கன் கொடுக்கிறோம் என்று கூறலாம்.


Yaro Oruvan
செப் 10, 2024 10:44

சுடாலின்தான் வர்றாரு.. விடியல் தரப்போறாரு........


Rajarajan
செப் 10, 2024 10:14

பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க பாடுபட்டார், ஒரு தமிழக முன்னாள் தலைவர். ஆனால் தற்போது மதுக்கடைகளில் கூட்டம் குறைவதை அதிகரிக்க பாடுபடுகிறார், இந்நாள் தலைவர். ஆகா, இவரல்லவோ உண்மையில் மக்கள் தலைவர்.


N.Purushothaman
செப் 10, 2024 09:36

ஆட்சியாளர்களே கஞ்சாவுக்கு அடிமையானவனுங்க மாதிரி தான் இருக்காங்க ....இதுல ஆராய்ச்சி வேற


Baskaran Ramasamy
செப் 10, 2024 08:54

நல்ல ஆராய்சி. கூடிய விரைவில் பீர் விற்பனையை அதிகரிக்க மார்கட்டிங் டீம்யை துரித படுத்தவும். டிவி விளம்பரம், டிஜிட்டல் மார்கட்டிங், டாஸ்மாக்கில் மட்டுமில்லாமல் அனைத்து கடைகள் மற்றும் சூப்பர் மார்கெட்டில் அனுமதி கொடுக்கலாம்


karunamoorthi Karuna
செப் 10, 2024 08:20

சாராய விற்பனை அதிகரிக்க ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவித்தால் உலக அளவில் முதலிடம் பெறலாம்


சுலைமான்
செப் 10, 2024 08:04

தமிழக அரசே... மானிய விலையில் பீர் விற்பனை செய்தால் விற்பனை அதிகரிக்கும். கவலை வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.


chennai sivakumar
செப் 10, 2024 07:40

அடடா. என்ன ஒரு மார்க்கெட் research இதுக்கு ஒரு குழு/ கமிட்டி அமைத்து அவர்களுக்கு அள்ளி கொடுத்து ஒரு தீர்மானம் செய்யலாமே


rama adhavan
செப் 10, 2024 06:37

திராவிட மாடல் ஆட்சியில் திராவகம் தான் சாராயம் முக்கிய இடம்.


சமீபத்திய செய்தி