உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா

சென்னை:வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை தேர்தல் கமிஷன் இணையதளம் மற்றும் மொபைல்போன் ஆப் வழியே அறிந்து கொள்ளலாம்.தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் 3.06 கோடி ஆண்கள்; 3.17 கோடி பெண்கள்; 8467 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.அனைத்து வாக்காளர்களுக்கும் தேர்தல் கமிஷன் சார்பில் 'பூத் சிலிப்' வழங்கும் பணி நடந்து வருகிறது. 'பூத் சிலீப்' கிடைக்காதவர்கள் தங்கள் பெயர், வாக்காளர்கள் பட்டியலில் உள்ளதா, தங்கள் ஓட்டுச்சாவடி அமைந்துள்ள இடம் போன்ற விபரங்களை www.elections.tn.gov.in, voters.eci.gov.in ஆகிய இணையதளங்களிலும், 'voter Helpline' என்ற மொபைல் போன் செயலியிலும் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி