உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும்; லண்டன் புறப்பட்ட இளையராஜா பேட்டி

மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும்; லண்டன் புறப்பட்ட இளையராஜா பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை' என சிம்பொனியை அரங்கேற்ற லண்டன் புறப்பட்ட இளையராஜா உறுதி அளித்துள்ளார்.சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்ட இசைஞானி இளையராஜா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எல்லோருக்கும் வணக்கம். இந்த புதிய சிம்பொனியை, உலகிலேயே தலை சிறந்த இசைக்குழுவுடன் இணைந்து லண்டனில் 8ம் தேதி வெளியிட இருக்கிறோம். ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. உலகிலேயே தலைசிறந்த இசை திருவிழாவாக நடைபெற உள்ளது. நல்ல மனதோடு வந்து இருக்கிறீர்கள். உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள். இசை நிகழ்ச்சி சிறப்பாக நடத்த இறைவனை வேண்டி கொள்ளுங்கள். இது என்னுடைய பெருமை அல்ல. நாட்டின் உடைய பெருமை. இந்தியாவின் பெருமை. INCREDIBLE இந்தியா மாதிரி. நான் INCREDIBLE இளையராஜா. இவ்வாறு அவர் கூறினார்.உங்களுடைய பெருமை...!அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நிருபர்களுக்கு இளையராஜா, 'அனாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்க கூடாது. நான் என்னுடைய வேலையில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறேன். நீங்கள் எல்லாம் சேர்ந்து தான் நான். உங்களுடைய பெருமையை தான் அங்க போய் நடத்த போகிறேன். எல்லோருக்கும் வாழ்த்துகள். இறைவன் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Raj
மார் 06, 2025 19:24

Money minded person.


Sivagiri
மார் 06, 2025 13:51

ஏற்கனவே முன்பு ஒண்ணு போட்டது என்ன ஆச்சுன்னே தெரியல , ,


நாஞ்சில் நாடோடி
மார் 06, 2025 13:23

வாழ்க இளைய ராஜா ...


Ray
மார் 06, 2025 10:16

தமழ்நாட்டுக்கு பெருமை மிக்க தருணம்தான் ஆனாலும் அதை ஆரியர்கள் மனமார பாராட்டுவார்களோ? ஒருக்காலுமில்லை என்பதை உணரவேண்டும். அதுபோலவே வடநாட்டினரின் கண்ணிலோ கருத்திலோ படப் போகிறதா என்ன? NEVER சிவாஜியை ஏற்றுக் கொண்டார்களா? இந்திய அரசாங்கம் சிவாஜியை உரிய பட்டங்கள் கொடுத்து கவரவித்ததா? தேர்வார்களர்களின் பின்னணி அப்படி. சூப்பர் ஸ்டார் இரண்டாம் திருமணத்தால் வாழ்நாள் சாதனையாளரான கதை தெரியாதா?


Ganesun Iyer
மார் 06, 2025 10:56

எல்லோரும் சரியாக இருக்கிறார்கள், முட்டாளின் கண்களுக்கு பார்பதெல்லாம் தவறாக தெரிகிறது.


ஆரூர் ரங்
மார் 06, 2025 15:27

ராஜாவின் முதல் படத்திலேயே அவருக்கு பாடியதும் இசைக் கருவிகள் இசைத்ததும் நீங்க குறிபிட்ட அதே இனத்தார்தான். அட இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் முன்பே அவருக்கு SPB நெருக்கமாக இருந்தார். கண்டதிலும் சாதியைத் தேடவேண்டாம்.


V Ramanathan
மார் 06, 2025 17:52

இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இந்த ஆரிய திராவிட செத்த குதிரையை வைத்து ஓட்டுகிறீர்கள். யதார்த்திற்கு வாருங்கள் சார்.


Ray
மார் 06, 2025 19:58

1. எல்லோரும் சரியாக இருக்கிறார்களா. சிவாஜி கணேசன் பாரதராதனா பட்டத்துக்கு தகுயானவரில்லையோ? 2. காற்று எந்த பக்கம் அடித்தாலும் அந்தப் பக்கம் முதலில் ஓடிப்போய் ஒட்டிக் கொள்வது நம்மாள்களுக்கு புதிதல்ல. MSV Out Ilaiyaraajaa in.


மண்ணாந்தை
மார் 06, 2025 09:55

Waste of time


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை