வாசகர்கள் கருத்துகள் ( 2 )
புதிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் சம்பளமே தர முடியும் என்ற நிலையில் திராவிட ஆட்சி நடக்கிறது
இந்த கூட்டமைப்புகள் மக்களின் வெறுப்பை கேட்டு வாங்குகிறார்கள் . கஜானா காலியாக உள்ளதும் புதிய வருவாய் பெற வழிகாட்ட முடியுமா ?
சிங்கம்புணரி: தமிழகத்தில் ஆசிரியர் அரசு ஊழியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டம் மாற்றியமைக்கப்பட்டு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமாக நடத்துகின்றனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 67 துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் 62 பள்ளிகளின் ஆசிரியர்கள் பணிக்கு வராமல் முழுமையாக அடைக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வந்து காலை உணவை சாப்பிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒரு சில பள்ளிகளில் மட்டும் சில ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.