உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிபதி சந்துரு பரிந்துரை: வி.எச்.பி., எச்சரிக்கை

நீதிபதி சந்துரு பரிந்துரை: வி.எச்.பி., எச்சரிக்கை

மதுரை : 'தமிழகத்தில் ஜாதியை ஒழிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பரிந்துரைகளை அமல்படுத்தினால் போராட்டம் நடத்தப்படும்' என விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.,) அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகரன் எச்சரித்துள்ளார்.அவர் கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க., அரசு பதவிக்கு வந்தது முதல் ஹிந்து மத விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. ஓட்டு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் வகையில் தி.மு.க., அரசு ஹிந்து மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தமிழகத்தில் உள்ள கோயில்களில் தினசரி பூஜைகள் நடக்க நிதி வழங்க மறுக்கும் தி.மு.க., அரசு, கோயில் பூஜாரிகளுக்கு முறையாக சம்பளம் வழங்குவதில்லை.இந்நிலையில் ஜாதி, மதக்கலவரங்களை ஒழிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் கமிஷனை அமைத்து அதனிடமிருந்து ஒரு அறிக்கையையும் பெற்றுள்ளது. அதில் மாணவர்கள் விபூதி பூசக் கூடாது, கோயில் திருவிழாக்களுக்கான காப்பு கயிறு கட்டக்கூடாது உள்ளிட்ட ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துகள் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு அவற்றை அமல்படுத்தக் கூடாது.தவறினால் தமிழகம் முழுவதும் வி.எச்.பி., சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

muthu
ஜூன் 24, 2024 22:36

Let VHP BJP give recommendation to abolish e and religious tem in all ways . Schools should be without discriminating. i.e Christians management schools too no christian symbols , Muslim run schools too .no muslim symbols . Hindu managed schools too no hindu symbols . Let govt discuss core issue with all party meet


Varatharajan Bhoopathy
ஜூன் 22, 2024 20:35

மாணவர்கள் விபூதி பூசக் கூடாது, காப்பு கயிறு கட்டக்கூடாது  என்பர்கள் பிறகு மாணவிகள் பொட்டு வைக்க கூடாது, வளையல்கள் போட கூடாது என்பர்கள்... ஒரு துளியும் வாய்ப்பு இல்லை. காலம் எல்லாவற்றிக்கும் உரிய பாடங்களை கற்று தருகின்றது...


Krishna Kumar
ஜூன் 22, 2024 11:35

இந்த பரிந்துரை அணைத்து மதத்தினருக்கும் பொருந்துமா அப்படி என்றால்


s chandrasekar
ஜூன் 22, 2024 10:53

Who asked Hindus to vote for dmk.


R.RAMACHANDRAN
ஜூன் 22, 2024 07:53

சந்துரு என்பவர் நாடு நிலைமை தவறியவர் .இப்போது பல்வேறு ஆணையங்கள் தலைவராக அமர்த்தப்பட்டு ஒரு தலை பட்சமான அறிக்கைகள் சமர்பிக்கிறார்.


Rangarajan
ஜூன் 22, 2024 01:07

இந்து மத ஒட்டுக்கள் வேண்டும் ஆனால் நெற்றியில் இடக்கூடாது என்ற நிலை சொல்வது முன்னாள்நீதிபதி. உண்மையில் வருத்தமான விஷயம். பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து


V RAMASWAMY
ஜூன் 21, 2024 19:56

அப்பாடி, இப்பொழுது தான் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஒரு சிறு சப்தம் கேட்கிறது. இது டமார ஒலி போல் எல்லா இடங்களிலும் ஒலித்து நாற்காலியில் உட்கார முடியாத அதிர்வலைகளை ஏற்படுத்தவேண்டும்.


Balakrishnan karuppannan
ஜூன் 21, 2024 19:22

ஜாதியை ஒழிப்பது என்பது பள்ளிகளில் மதம் ஜாதி என்ன என்று கேட்க வேண்டாம்... அப்புறம் ஜாதி மத பண்டிகை... விழாக்களுக்கு விடுமுறை வேண்டாம். பிரியாணி மற்றும் கேக் சாப்பிடும் பண்டிகை முறையில் கலந்து கொள்வதை முதல்வர் தவிர்த்து விட வேண்டும்.


Ravichandran S
ஜூன் 21, 2024 18:52

அவுங்கள செய்ய விடுங்க திமுகவிற்குள்ளேயே பிரச்சனை யை கிளப்பி விடுவார்கள்


tmranganathan
ஜூன் 21, 2024 17:16

ஒரு ஆணியும் புடுங்க முடியாது. ஆளுநர் டிஸ்மிஸ் செய்வார்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை