மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
4 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
7 hour(s) ago | 39
ராஞ்சி:ஜார்க்கண்டில் முதல்வராக இருந்த அக்கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் மீது, நில மோசடி மற்றும் சுரங்க மோசடி புகார்கள் எழுந்தன.இந்த விவகாரத்தில், கோடிக்கணக்கான ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அவரை அமலாக்கத் துறையினர் கடந்த ஜன., 31ல் கைது செய்தனர். இதையடுத்து, கட்சியின் மூத்த தலைவரான சம்பாய் சோரன், முதல்வராக பதவியேற்றார், இதற்கிடையே, காண்டே சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., சர்பரஸ் அஹமது, தன் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த தொகுதி காலியானது. இந்த தொகுதிக்கு, கடந்த 20ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இங்கு, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா போட்டியிட்டார். இவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில் திலீப் குமார் வர்மா களமிறக்கப்பட்டார். தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கையில், பா.ஜ., வேட்பாளர் முன்னிலை பெற்ற நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் கல்பனா முன்னிலை பெற்றார். முடிவில், 27,149 ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜ.,வின் திலீப் குமார் வர்மாவை அவர் வீழ்த்தினார்.வெற்றி குறித்து கல்பனா கூறுகையில், ''மக்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கு நன்றி. அவர்களுக்காக நான் அயராது உழைப்பேன். இந்த வெற்றி, 'இண்டியா' கூட்டணியின் ஒற்றுமையை காட்டுகிறது,'' என்றார். இதையடுத்து, ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரனுக்கு பதிலாக, கல்பனா விரைவில் பதவியேற்பார் என, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
4 hour(s) ago | 3
4 hour(s) ago | 2
7 hour(s) ago | 39