உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாட்டை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல்: பிரசாரத்தில் கனிமொழி பேச்சு

நாட்டை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல்: பிரசாரத்தில் கனிமொழி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: வரும் லோக்சபா தேர்தல் நாட்டை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல் என திமுக எம்.பி கனிமொழி கூறினார்.திருநெல்வேலி தொகுதி காங்., வேட்பாளர் ராபர்ட் புருஸ்-ஐ ஆதரித்து திமுக எம்.பி கனிமொழி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போதெல்லாம் தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரவில்லை. தேர்தல் நேரம் என்பதால் தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ஒருமுறை பிரதமர் மோடி வருகிறார். புயல், வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uhn95k6d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தல் நேரத்தில் தான் பிரதமருக்கு தமிழ் மீது பாசம் வருகிறது. தமிழ் தெரியவில்லை என பிரதமர் மோடி வருத்தப்படுகிறார். இந்தி கற்க கூறும் பிரதமர், நல்ல ஆசிரியரை பார்த்து தமிழ் கற்றுக்கொள்ளலாம். நம்முடைய முதல்வரிடம் சொன்னால், உடனே நல்ல ஆசிரியரை டில்லிக்கு அனுப்பி வைத்திருப்பார். இனிமேல் நீங்க டில்லியில் இருக்கமாட்டீங்க. பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் சொல்லி தருவது பற்றி எங்களுக்கு கவலையில்லை. நிச்சயமாக தமிழ் கற்றுக்கொள்ளலாம். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் ஒரு பக்கம் தமிழ் மீது பிரதமர் மோடிக்கு பாசம் வந்துள்ளது. மறுபக்கம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தமிழக மக்களுடைய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுகிறார். வரும் லோக்சபா தேர்தல் நாட்டை மீட்டெ டுக்க வேண்டிய தேர்தல். சாதாரண, சாமானிய மக்களின் உரிமைகள் மற்றும் மீனவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல். இவ்வாறு கனிமொழி பேசினார்.

கனிமொழி வாகனத்தில் சோதனை

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் கனிமொழியின் காரில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். கனிமொழி காரில் பணம், பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி