உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வழக்குகள் பெருமளவு தேங்கி கிடப்பதற்கு வக்கீல்கள் ஒத்துழைப்பின்மையே காரணம்

வழக்குகள் பெருமளவு தேங்கி கிடப்பதற்கு வக்கீல்கள் ஒத்துழைப்பின்மையே காரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வருமான வரி விதிப்பு தொடர்பாக, கோவையை சேர்ந்த லீலாவதி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று தீர்ப்பு வழங்கினார். மேலும், தனது உத்தரவில் அவர் கூறியதாவது: அரசு துறைகளின் வழக்கறிஞர்கள் கோருவதால், பதில் மனு தாக்கல் செய்வதற்காக, அவ்வப்போது வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது. ஒரு வழக்கில், ஏழு முறை தள்ளி வைத்தும், 8வது முறையாக அவகாசம் கேட்டதால், இந்த நீதிமன்றம் அபராதம் விதித்தது.இந்த வழக்கை பொறுத்தவரை, விசாரணைக்கு எடுக்கப்பட்ட முதல் நாளிலேயே, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ராமசாமி, பதில் மனுத்தாக்கல் செய்தார். அவரது முயற்சியை, இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது.விசாரணையை தள்ளிவைக்க கோராமல், பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். விசாரணையின் முதல் நாளிலேயே, அவரால் பதில் மனுத் தாக்கல் செய்ய முடியும் போது, மற்ற வழக்கறிஞர்களால் ஏன் முடியவில்லை.நீதிமன்றகளால் தான், வழக்குகள் தேக்கம் அடைவதாக பொது மக்கள் கருதுகின்றனர். ஆனால், இரு தரப்பிலும் வாதங்களை வைக்கும் நிலையில், வழக்கை பைசல் செய்ய, நீதிமன்றங்கள் முயற்சிகள் எடுக்கின்றன. பெரும்பாலான வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு, பதில் மனுத்தாக்கல் செய்யாமல் இருப்பதும், அதிகாரிகள் மற்றும் துறை வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பின்மையுமே காரணம்.துறை வழக்கறிஞர்கள், பதில் மனுத்தாக்கல் செய்து, அவகாசம் கோராமல் வாதங்களை முன்வைக்க தயாராக இருக்க வேண்டும். அதனால், நீதிமன்றத்தின் நேரம் மிச்சமாவது மட்டுமின்றி, அதிக எண்ணிக்கையில் வழக்குகளும் பைசல் செய்யப்படும். எனவே, அவகாசம் கோராமல், குறித்த நேரத்தில் பதில் மனுத் தாக்கல் செய்வதற்கு, துறை வழக்கறிஞர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Ramakrishnan
ஆக 31, 2024 09:57

எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும். அதிக பட்சம் 2 வாய்தாவிற்கு மேல் ஏன் அனுமதிக்க வேண்டும்? இன்றைய நிலையில் உள்ள சிறப்பான தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றம் வசதிகளில் எந்த ஒரு தகவலையும் நிமிடத்தில், பெற, பரிமாற முடியும் போது எதற்கு வருடக்கணக்கில் வாய்தாக்கள்? வழக்குகளை கால வரையின்றி ஒத்திப் போடுவது யார்? நமது நாட்டில் Case வேல்யூ வை விட face value தான் முக்கியம். அரசியல் வாதிகள், மற்றும் பெறும் பணக்காரகளின் வழக்குகள், விடுமுறை நாட்களில், ஏன் நடு இரவில் கூட விசாரித்து உடனடியாக தீர்ப்புகள் வழங்கப்படுவதை நாம் பார்க்கிறோம். இதே சாதாரண மனிதன் வழக்கு என்றால் செத்த பிறகு தான் தீர்ப்பு வரும். இந்த நீதிமன்றங்கள், வக்கீல்கள் ஒரு கடினமான வலையை பின்னி சாதாரண மக்கள் எளிதில் அணுக முடியாதவாறு வைத்து உள்ளனர். இதில் வழக்கு தாமதம், பொது மக்கள் அவதி என்றெல்லாம் முதலைக் கண்ணீர் வடிப்பது வாடிக்கை. இந்தியாவில் என்றுமே தாமதத்தால் மறுக்கப்பட்ட நீதி தான் விதி. இதனால் தான் காவல் துறையில் பிடிக்கும் ரௌடிகள் இப்போதெல்லாம் பாத்ரூமில் வழுக்கியோ, தப்பிக்க முயற்சிக்கும் போதோ கையையும் காலையும் உடைத்து கொள்கிறார்கள். குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை, குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்ப்பு என்று சட்டம் இயற்றினால் தான் இதற்கு தீர்வு வரும்.


ak bk
ஆக 30, 2024 21:02

அமாம் பல பொய் வழக்கு கோர்ட் ல தாக்கல் பண்ணுறாங்க தைரியமா கடந்த 15 வருஷமா இது நடக்கிறது


Mr Krish Tamilnadu
ஆக 30, 2024 16:29

நீதிபதி அவர்கள் வருத்தத்திற்காக சட்ட சிக்கல் இல்லை என்றால் பரிந்துரை - இன்று நிறைய வக்கீல்கள் தனது படிப்பை அந்தஸ்து போல் வைத்து கொண்டு வேறு தொழில் தான் பார்க்கிறார்கள். வருடத்திற்கு இத்தனை மாணவர்கள் படித்து வருகிறார்கள். புதிய கேஸ்களின் எண்ணிக்கை எவ்வளவு?. எல்.ஜ.சி ஏஜெண்ட் போல், ஒருவர் வருடத்திற்கு இத்தனை கேஸ்கள் எடுத்து நடத்தி முடிக்க வேண்டும். கேஸ் இல்லாதவர்களுக்கு அரசு நிலுவையில் உள்ள கேஸ்களை மாற்றி தருகிறோம் என தீர்வுகாண வழியை தெளிவாக யோசியுங்கள் ஐயா. கட்சியில் சேர்ந்து விடுகிறார்கள். நில புரோக்கர், பத்திர பதிவு, விவசாயம், வியாபாரம் அனைத்து செய்கிறார்கள், செய்ய வேண்டியதை தவிர. மற்ற படிப்புக்கும் வக்கீல் படிப்புக்கும் வித்தியாசம் உண்டு அல்லவா?.


Subramaniam Mathivanan
ஆக 30, 2024 12:47

பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு வாய்தாக்கள் மட்டுமே என கட்டுப்பாடு விதிப்பது ஒவ்வொரு கேஸுக்கும் முதல் நாளிலேயே வக்கீல்கள் ஒப்புதலுடன் கால நிர்ணயம் செய்தல் கேஸ்கள் குறைப்பதற்கு வழி வகுக்கும்


அன்பு
ஆக 30, 2024 14:50

இரண்டு தடவைகள் மட்டுமே வாய்தா அனுமதி வழங்க வேண்டும். மேலதிக வாய்தா வேண்டும் எனில் அபராதம் அதிக அளவில் வாங்க வேண்டும். வாய்தா மேலும் வேண்டும் எனில் அபராதம் இரட்டிப்பாக செலுத்த வேண்டும். வாய்தா கேட்பது சாட்சியங்களை அழிக்கவே. வாய்தா வாங்கி வருமானம் ஈட்டும் வக்கீல்கள் அதிகம் உள்ளனர்.


spr
ஆக 30, 2024 10:59

வாய்தா வாங்கியே வருமானம் ஈட்டும் வழக்காடுவோர் வழக்கறிஞர் என்று எவரையும் கூற முடியவில்லை ஏனெனில் பலருக்கு அந்த அறிவே இல்லை இருப்பது எந்நாளும் இருக்கும் ஒன்றுதான் ஆனால் விசாரணை முடிந்தும் பேரம் படியாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாகச் சொல்லப்படுவது உண்மையா ஏற்கனவே பல வழக்குகள் தீர்க்கப்படாமல் இருக்கையில் தானாக முன்வந்து வழக்கை விசாரிப்பது எதனால்


Rengaraj
ஆக 30, 2024 10:59

சட்டம் எல்லோரையும் சமமாக பார்க்கிறது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு வாய்ய்பு தருகிறது என்ற கோணத்தில் நீதிபதிகள் சிவில் வழக்குகளில் அவகாசம் தந்து தாமதப்படுத்தலாம். ஆனால் அதை வக்கீல்கள் தங்கள் இயலாமையை மறைப்பதற்கும் , சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுகூலம் செய்வதற்கும் சாதகமாக பயன்படுத்துவதை ஏற்கமுடியாது. கிரிமினல் வழக்குகளில் குறிப்பாக பாலியல் குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கும் , பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றவாளிகளுக்கும் , கள்ளச்சாராயம் , போதை மருந்து,போதை மாத்திரை , கஞ்சா , போன்றவற்றில் ஈடுபடும் சமூக குற்றவாளிகளுக்கும் , ஆதரவாக செயல்படும் வக்கீல்களை நீதிபதிகள் அபராதம் விதித்து எச்சரிக்கவேண்டும். பார்கவுன்சில்கள் அந்த மாதிரி வக்கீல்களை உறுப்பினர் பதவியிலிருந்து தள்ளிவைக்கவேண்டும். இந்த மாதிரி குற்றவாளிகளுக்கு வாதாடும் வக்கீல்களும் குற்றவாளிகளே இவர்களுக்கு இரக்கம் பார்ப்பது கூடாது. அடித்தால்தான் திருந்துவான் என்றால் ஆசிரியர் அடித்துதான் ஆகவேண்டும். சமூகத்தில் குற்றங்கள் குறையவேண்டும் என்றால் கடுமை காட்டத்தான் வேண்டும். பாரபட்சம் கூடாது.


Bhaskar Balasubramaniam
ஆக 30, 2024 09:59

சில வழக்குகளில் அனைத்து வாதங்களும் முடிந்த பின்னரும் தங்களது தீர்ப்பை தேதி குறிப்பிடாமலும், சில சமயங்களில் வருடக் கணக்கில் தள்ளிப்போடும் நீதிபதிகளை யார் கேள்வி கேட்பது


Mahalingam Laxman
ஆக 30, 2024 09:17

I fully agree with the Judge. I suggest there must be a provision introduced in the law that If counter is not filed within seven days the court will decide on the basis of petition. No adjournment. we cannot blame lawyers only. The petitioners ask them to apply for adjournment so if the law is changed as suggested they will be forced to file the reply. In all cases the case must be decided within three months and no adjournment for more than 3 times. The i dividual concerned also should be punished. The cost of the proceedings are to be recovered if any one file infructuous petition.


SIVA
ஆக 30, 2024 09:16

மெரினா பீச் ல ஒருத்தருக்கு சமாதி வைக்க ஒரே நாளில் தீர்ப்பு கொடுத்தது போல் நீதி மன்றம் அணைத்து வழக்குகளிலேயும் விரைந்து தீர்ப்பு கொடுக்கலாம் , நீட் எக்ஸாம் இந்தியா முழுவதும் கட்டாயம் என்று சொன்னது உச்ச நீதி மன்றம் , இது தொடர்பாக தமிழகம் விலக்கு கேட்டு இனி நீதி மன்றம் வர கூடாதுஎன்றும் சொன்னது , ஆனால் அந்த தீர்ப்பை வைத்து தான் அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் வெட்டி அரசியல் நடக்கின்றது, ஆனால் நீதி மன்றம் மாணவர்களுக்கு எது நல்லது என்று தெரியும் அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்று சொல்கின்றது , இவர்கள் தீர்ப்பு கொடுத்த விஷயத்தில் இவர்கள் பக்கம் விசாரணை வரும் போதுதாவது இது சரி இது தவறு என்று தெளிவாக முகத்தில் அடித்தார் போன்று சொல்ல வேண்டியது தானே ... அப்போது தான் உங்கள் மீது மக்களுக்கு மீது மரியாதை வரும் ...


VENKATASUBRAMANIAN
ஆக 30, 2024 08:27

இழுத்தடிக்கும் துறைகளிலிருந்து அபராதம் வசூல் செய்யலாமே. அதை மனுதாரருக்கு கொடுக்கலாமே. அப்போதுதான் விரைவாக முடிக்க பார்ப்பார்கள்.


புதிய வீடியோ