உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வி வளாகங்களில் கண்காட்சிக்கு தடை கேட்டு வழக்கு

கல்வி வளாகங்களில் கண்காட்சிக்கு தடை கேட்டு வழக்கு

சென்னை:'கல்வி நிறுவன வளாகங்களில், வர்த்தக கண்காட்சிகள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது' என, அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பரத் என்பவர் தாக்கல் செய்த மனு:கல்வி நிறுவனங்களில், கல்வி சாராத கூட்டங்கள், நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் என, எந்தவொரு அரசு நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது; கல்வி சார்ந்த நிகழ்வுகளை மட்டுமே நடத்த வேண்டும் என, 2017ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.இந்த உத்தரவை மீறி, திருச்சி மற்றும் வேலுாரில் உள்ள தனியார் பள்ளிகளில், கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அங்கேயே வீசப்பட்டதால், பள்ளி நேரத்தில் விளையாடிய மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, கல்வி நிறுவன வளாகங்களில், வணிக ரீதியிலான கண்காட்சிகளை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ