உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய வக்கீல்கள் தொழில் செய்ய தடை

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய வக்கீல்கள் தொழில் செய்ய தடை

சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோர், வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் செந்தில்நாதன், சக்திவேல், விஜயகுமார், விமல் மற்றும் தினேஷ்குமார் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட விழுப்புரத்தை சேர்ந்த கோவிந்தராஜன், சமூக வலைதளத்தில் ஆபாசமாக கருத்து வெளியிட்ட திருவண்ணாமலையை சேர்ந்த மணியரசன் உள்ளிட்ட வழக்கறிஞர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை, பார் கவுன்சில் பொறுப்பு செயலர் கிரிதா செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை