உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.எஸ்.பாபு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

வி.எஸ்.பாபு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

சென்னை: கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ விஎஸ் பாபு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.அவர்களின் அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=enknbixz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தமிழக கவர்னர் -அர்லேகர்

வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

முதல்வர் விஜய்

வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்ற வி.எஸ்.பாபு திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.அவரின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுக தலைவர் ஸ்டாலின்

வி.எஸ்.பாபு மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வீ த லீடர்ஸ் அண்ணாமலை

வி.எஸ். பாபு காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தவெக கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.வி.எஸ். பாபு ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.ஓம் சாந்தி!

இபிஎஸ் இரங்கல்

கொளத்துார் தொகுதி எம்எல்ஏ விஎஸ் பாபு மறைவு செய்தி அறிந்து வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி

தவெகவைச் சேர்ந்த வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.70 நாள்களுக்கு மேலாக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவரது உடல்நிலை தேறி வருவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கொளத்தூர் தொகுதி மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி

பாபு காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அவர் சார்ந்த இயக்கத்தினருக்கு எனது ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன்இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

தாமரை மலர்கிறது
நவ 20, 2026 01:29

ஸ்டாலின் கொளத்தூரில் மீண்டும் நின்றால், விஜய் த்ரிஷாவை இறக்கி, ஸ்டாலினுக்கு இன்னொருமுறை கொத்து பரோட்டா போடவேண்டும்.


Kumar Kumzi
நவ 19, 2026 21:00

சுடலை நைனா கொத்து பரோட்டா சாப்பிட ஆசையா கெளம்பு கொளத்தூருக்கு


M Ramachandran
நவ 19, 2026 19:30

அவருக்கு சூனியம் வைத்த கம்மனாட்டி நடுத்தெருவில் அவர்கள் வாரிசு கதரனும்.


BHARATH
நவ 19, 2026 20:58

அவனுக்கு அவனே சூனியம் வெச்சுக்கிட்டான்.


M Ramachandran
நவ 19, 2026 19:29

அவருக்கு சூனியம் வைத்த கம்மனாட்டி அய்யோன்னு போகணும்.


Ketheesh Waran
நவ 19, 2026 19:03

. பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்


priyan, vadanad, madurai
நவ 19, 2026 17:53

அடுத்த இடை தேர்தலில் எங்களது விக்கப்பார் வரலாறு காணாத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அவர் சமீபத்திய திருமண நிகழ்வில் அறைகூவல் விடுத்ததை போல மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார். தேய மு க அனுப்பி வைத்த பி டீம் ஆட்சி மறுபடியும் விடியா மாடல் அரசு அமைக்க kolathur மக்கள் ஆர்வமுடன் காத்து இருக்கிறார்கள்


என்றும் இந்தியன்
நவ 19, 2026 17:46

வி.எஸ்.பாபு மறைவுக்கு இரங்கல். எம் எல் ஏ பதவியேற்ற ஆறு மாதத்தில்???அதுவும் ஸ்டாலினையே தோற்கடித்தவர்???


Vasan
நவ 19, 2026 16:48

நைனார் ஏன் இன்னமும் இரங்கல் செய்தி பதிவு செய்யவில்லையா?


Azhagu
நவ 19, 2026 16:44

முன்னாள் முதல்வருக்கு கொத்து ப்ரோட்டா போட்டவர். அடுத்து யாருக்கு அந்த யோகம் வரப் போகிறதோ தெரியவில்லை.


BHARATH
நவ 19, 2026 21:03

கொத்து பரோட்டா போட்டவர் ரொம்ப சந்தோஷத்தில் நிறைய குடிச்சு செத்து போய்ட்டார்.


ராஜா
நவ 19, 2026 16:33

TVK வுக்கு முருகன் கொடுத்த முதல் அடி. RIP.


புதிய வீடியோ