மேலும் செய்திகள்
குறைதீர் முகாம் கமிஷனர் உத்தரவு
15-Aug-2024
சென்னை:''ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய சம்போ செந்திலை, விரைவில் கைது செய்வோம்,'' என, பத்திரிகையாளர் சந்திப்பில், போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்தார்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் , பத்திரிகையாளர்களை சந்தித்த போலீஸ் கமிஷனர் அருண் கூறியதாவது:சென்னையில் ரவுடிகளை ஒழித்துக்கட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கையால், பல ரவுடிகள் சென்னையை விட்டு ஓடிவிட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் சம்போ செந்திலை, விரைவில் கைது செய்வோம். அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம்.போதைப் பொருட்களை ஒழிக்க, சென்னை காவல் துறை உளவுப்பிரிவில், தனிப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது.மோதலில் ஈடுபடும் மாணவர்கள் பட்டியலை சேகரித்து, அவர்களின் வீட்டிற்கு சென்று, பெற்றோர் முன்னிலையில் கவுன்சிலிங் அளிக்க உள்ளோம்.சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் ராஜஸ்தான், உத்தரப்பிரதேச மாநிலங்களிலிருந்து செயல்படுவது தெரிந்துள்ளது. கம்போடியா நாட்டில் இருந்து தான், அதிக ஆன்லைன் மோசடி குற்றங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.ஆன்லைன் மோசடியில் பணத்தை இழப்போர், 1930 என்ற சைபர் கிரைம் பிரிவில் தெரிவித்தால், பணத்தை மீட்டு விட முடியும்.பள்ளி, கல்லுாரிகளுக்கு இ-மெயில் வாயிலாக வரும் வெடிகுண்டு மிரட்டல்களுக்கு, விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு, கடந்தாண்டு அனுமதி அளித்த இடத்தில் மட்டுமே சிலை அமைக்க அனுமதித்து உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
15-Aug-2024