உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லோக்சபா தி.மு.க., தலைவர் யார்?: எம்.பி.,க்கள் கூட்டத்தில் இன்று முடிவு

லோக்சபா தி.மு.க., தலைவர் யார்?: எம்.பி.,க்கள் கூட்டத்தில் இன்று முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லோக்சபா தி.மு.க., தலைவரை தேர்வு செய்ய, அக்கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் இன்று நடக்கிறது.கடந்த 2019ம் ஆண்டின் லோக்சபா தி.மு.க., தலைவராக டி.ஆர்.பாலு, துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக பழனிமாணிக்கம், கொறடாவாக ஆ.ராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அப்போதே, தலைவர் பதவிக்கு கனிமொழி போட்டியிட விரும்பினார். ஆனால், மூத்த எம்.பி., என்ற அடிப்படையில் டி.ஆர்.பாலுவுக்கு அப்பொறுப்பு தரப்பட்டது.தற்போது, டி.ஆர்.பாலு கட்சியின் பொருளாளராக உள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிடவே அவருக்கு வாய்ப்பு தரப்பட மாட்டாது என கூறப்பட்டது. ஆனால், இது தான் கடைசி தேர்தல் என அவர் கூறியதால், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி ஒதுக்கப்பட்டது.அதனால், இம்முறை பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கனிமொழி, லோக்சபா தி.மு.க., தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரையும், 'டிபாசிட்' இழக்க வைத்துள்ளார் கனிமொழி. அந்த அடிப்படையில், அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளதாக, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. லோக்சபா தி.மு.க., செயலர் பதவிக்கு கடந்த முறை யாரையும் நியமிக்கவில்லை.எனவே, இந்த முறை செயலர் பதவியும், புதிதாக துணை கொறடா பதவியும் உருவாக்கப்பட்டு, புதிய எம்.பி.,க்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன.இது குறித்து, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதல்வர் ஸ்டாலின் தலைமையில், லோக்சபா தேர்தலில் தேர்ந் தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் கூட்டம், இன்று மாலை 6:30 மணிக்கு அறிவாலயத்தில் நடக்கவுள்ளது' என, கூறப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Rathinakumar KN
ஜூன் 08, 2024 13:02

கேன்டீனில் யார் தலைமையில் டீ போண்டா சாப்பிட வேண்டும் என்பதற்க்காக தலைவரை தேர்ந்தெடுக்கிறார்கள்


ஆரூர் ரங்
ஜூன் 08, 2024 12:23

அதிக பஜ்ஜி, போண்டா சாப்பிடும் போட்டி நடத்தி வெற்றி பெறுபவருக்கு தலைமை பதவியை அளிக்கலாம் .


Soumya
ஜூன் 08, 2024 11:41

காமெடி பண்ணுவதில் தா டாப்பூ


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 08, 2024 11:19

திராவிட மாடல் புகழ், தமிழ்த்தேச மன்னரின் பெருமைகளை மக்களவையில் எடுத்தோதவேண்டிய பணியே எம் பி க்களின் பணியாகும் ..... வாக்களித்த மக்களுக்கு சேவை செய்தல் அல்ல ......


தத்வமசி
ஜூன் 08, 2024 11:07

இவர் தான் அனைவரையும் கேண்டீனுக்கு அழைத்துச் செல்வார்.


சதீஷ்
ஜூன் 08, 2024 11:06

கல்யாண சமையல் பாட்டு யார் தவறு இல்லாம பாடுகிறார்களோ அவருக்கு தர வேண்டும் சரிகமபத நடுவரை அழைக்கவேண்டும்


theruvasagan
ஜூன் 08, 2024 10:45

குரூப்பா கேன்டீனுக்கு போறதுக்கு யார் தலைமையில் என்பதை தீர்மானம் செய்யறதுக்காக.


ManiK
ஜூன் 08, 2024 10:31

யாராக இருந்தால் நமக்கெண்ண... totally useless and helpless 39


G Mahalingam
ஜூன் 08, 2024 10:07

கேண்டின் போக பதவி தேவை இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு மாதிரியான விலைதான்.


கடுகு
ஜூன் 08, 2024 09:25

.நல்லபடியா கேன்டீன் கான்டிராக்டையாவுது எடுத்துக்கிட்டு வாங்க


மேலும் செய்திகள்