உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை

திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் இன்று முதல் கற்பூரம் மற்றும் பிரம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரணமூர்த்தி என்ற பெயர் உள்ளது. சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது. பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்து அனுமதி கிடைத்தால் ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது. இதுவரை இங்கு மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு,நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம் சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை, இருப்பு சங்கிலி, ருத்தரட்சம், இரு இளநீர்கள் என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி முதல் வைக்கோல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள ஆறுதொழுவு தங்கவேல்(50) என்ற பக்தரின் கனவில் கற்பூரம் மற்றும் பிரம்பு வைக்க உத்திரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று முதல் கற்பூரம் மற்றும் பிரம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது. 'சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதே அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்' என சிவாச்சரியார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Gowri Sankar
மார் 07, 2025 09:24

இதன் அர்த்தம் என்னவென்றால் தற்போது தமிழக ஆட்சியாளர்களுக்கு பிரம்பு அடியும், தற்போதைய தமிழக ஆட்சி கற்பூரம் போல் கரைவதும் ஆகும்.


Prakash C
மார் 06, 2025 22:43

சிவன் கொடுக்கறதை யாராலும் தடுக்க முடியாது சிவன் தடுக்கறதை எவனாலும் தர முடியாது


Vimalkumar Vimal
மார் 06, 2025 20:09

ஓம் நமசிவாய


தமிழ்வேள்
மார் 06, 2025 19:43

திருட்டு திமுக வின் புத்திரர்களுக்கு பிரம்பால் அடி பழுக்க போகிறது போலும்.. அராஜகம் எல்லை மீறி போனால் பிரிட்டிஷ் அரசு போல பிரம்பால் மட்டுமே பேச வேண்டும்


Sugantha Ravi
மார் 06, 2025 19:34

இங்குள்ள பெண் தெய்வம் பெயர் என்ன?


Oru Indiyan
மார் 06, 2025 17:12

பிரம்பு..எதுக்கு.. யாருக்கு. புரிந்தால் சரி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை