உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என் வழக்கில் நானே வாதாடுவேன் ஜாமின் மனுவை வாபஸ் பெற்ற மகாவிஷ்ணு

என் வழக்கில் நானே வாதாடுவேன் ஜாமின் மனுவை வாபஸ் பெற்ற மகாவிஷ்ணு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'என் வழக்கில் நானே வாதாடுவேன்' என, ஜாமின் மனுவை, ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வாபஸ் பெற்றுள்ளார்.திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, 30. அவர், சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளியிலும், அசோக் நகர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், ஆற்றிய சொற்பொழிவுகள் சர்ச்சைக்குரியதாக அமைந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=46sfjmrz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

விசாரணை

இது தொடர்பாக, ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகாவிஷ்ணுவை, சைதாப்பேட்டை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர். அவரை, ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதேபோல, ஜாமின் கோரி, மகாவிஷ்ணு சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.இந்த மனுக்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் சுப்பிரமணியம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ''என் வழக்கில் நானே வாதாடிக் கொள்கிறேன்,'' எனக் கூறிய மகாவிஷ்ணு, ஜாமின் மனுவை வாபஸ் பெறுவதாக கூறினார்.

கேள்வி

இதையடுத்து, போலீஸ் காவல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, 'மகாவிஷ்ணுவிடம் ஏற்கனவே விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளீர்கள்; அதன் பிறகும் ஏழு நாள் காவலில் விசாரணை கோருவது ஏன்?' என, மாஜிஸ்திரேட் கேள்வி எழுப்பினர். அப்போது, 'மகாவிஷ்ணுவின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என அறிய வேண்டும். திருப்பூரில் உள்ள, அவரின் பரம்பொருள் பவுண்டேஷன் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது. வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வருவதால், அவரின் வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்ய வேண்டும்' என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.இதையடுத்து, மகாவிஷ்ணுவிடம், போலீஸ் காவல் விசாரணைக்கு சம்மதமா என, மாஜிஸ்திரேட் கேட்டார். அதற்கு அவர், 'எனக்கு எவ்வித ஆட்பேசனையும் இல்லை' என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாஜிஸ்திரேட், மகாவிஷ்ணுவை மூன்று நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

kulandai kannan
செப் 12, 2024 11:40

செம தில்லுதான் தல...


கூமூட்டை
செப் 12, 2024 11:14

எல்லாம் வல்ல இறைவன் செயல் எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் என்ற எண்ணம் வேண்டும்


MADHAVAN
செப் 12, 2024 10:52

போன ஜென்மத்தில் இவன் செஞ்ச பாவம்


MADHAVAN
செப் 12, 2024 10:51

பேச்சு சுதந்திரம் நல்லதுதான், ஆனால் நீ முன் ஜென்மத்தில் பாவம் செய்த மகா பாவி, அதனாலதான் இப்போ ஊனமா இருக்க அப்படினு சொன்ன கோவம் வராதா ?


Ramesh
செப் 12, 2024 14:48

வராது


V SURESH
செப் 12, 2024 10:07

மஹாவிஷ்ணு நாங்கள் உங்கள் கருத்து சுதந்திரத்துக்கு என்றும் ஆதரவாய் இருப்போம்.


sankaran
செப் 12, 2024 09:01

பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் பற்றி பேசியவர்கள் எங்கே ?.


vbs manian
செப் 12, 2024 08:51

பேச்சுக்கு இந்தளவு கடினமான நடவடிக்கையா. கம்யூனிச நாடுகளில் மட்டுமே நடக்கும்.


Yuvaraj Velumani
செப் 12, 2024 08:46

உன்னை போன்ற பொறம்போக்கு திராவிட கட்சிக்கு ஓட்டு போட்டதால் வந்தது


VENKATASUBRAMANIAN
செப் 12, 2024 08:11

காவல்துறை அரசியல்வாதிகளுக்கு துணை போய் பேரை கெடுத்துக்கொள்கிறது. இது உயர் அதிகாரிகளுக்கு புரிகிறதா. சமீபத்திய காவல்துறை நடவடிக்கை அப்பட்டமாக மக்களுக்கு புரிகிறது


Anand kumar
செப் 12, 2024 08:09

நீ போன ஜெனமம் செய்த பாவம் ...karma.. ??


Dharmavaan
செப் 12, 2024 08:35

கர்மா ஏன்பது இயற்கையாக ஏற்படுவது .மனிதனால் பழி வாங்குவது அல்ல


SSP
செப் 12, 2024 08:55

இருக்கலாம். இதனால் அவருக்கு பெரிய பாதிப்பு இருக்காது. அவரை பழிக்கும் விதத்தில் போட்ட உங்களுக்கு கர்மா விரைவில் பதில் சொல்லும்


முக்கிய வீடியோ