உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அஞ்சலை கைது

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அஞ்சலை கைது

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அஞ்சலை தனிப்படை போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து, 16ம் நாளுக்குள் எதிரிகளை பழிதீர்க்க, சபதம் எடுக்கப்பட்டு இருப்பதாக, போலீசாரை உளவுத்துறையினர் உஷார்படுத்தி உள்ளனர். இதனால், ஆம்ஸ்ட்ராங் 'பி' பிரிவு ரவுடி பட்டியலில் இருந்தபோது, அவருக்கு எதிர்ப்பாக இருந்து செயல்பட்ட ரவுடிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்டு தலைமறைவாகி இருக்கும் ரவுடி சம்போ செந்திலையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர்களில், சென்னை பெரம்பூர் பொன்னுசாமி நகரை சேர்ந்த ரவுடி திருமலைக்கு, ஒரு லட்சம் ரூபாய் கைமாறியதை தனிப்படை போலீசார் உறுதி செய்துள்ளனர். தனிப்படை போலீசார் கூறியதாவது: திருமலை மீது, இரண்டு கொலை வழக்கு உட்பட ஏழு வழக்குகள் உள்ளன. பெரம்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி, ஆம்ஸ்ட்ராங்குடன் பழகி வந்தார். அதனால், திருமலை மீது ஆம்ஸ்ட்ராங்கிற்கு சந்தேகம் எழவில்லை. மது குடிப்பதற்காக, அவ்வப்போது ஆம்ஸ்ட்ராங்கிடம் பணம் வாங்கியுள்ளார். ஆனால், திருமலையை, கடந்தாண்டு ஆக., 18ல் கொல்லப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தோழி அஞ்சலை இயக்கி வந்தது ஆம்ஸ்ட்ராங்கிற்கு தெரியாது. ஆம்ஸ்ட்ராங் கொலையில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரவுடி தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி, அவரது வழக்கறிஞர் ஹரிஹரன் மற்றும் அஞ்சலை ஆகியோருக்கு தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை வேவு பார்க்க, ரவுடி திருமலைக்கு, ஹரிஹரன் வாயிலாக ஒரு லட்சம் ரூபாய் முன்பணம் தரப்பட்டுள்ளது. இவ்வாறு தனிப்படையினர் கூறினர்.இந்நிலையில், போலீசாரின் தேடுதலுக்கு அஞ்சி, ஆந்திராவில் தலைமறைவாக இருப்பதாகச் சொல்லப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தோழியும், முன்னாள் பா.ஜ., நிர்வாகியுமான அஞ்சலையை, திருவள்ளூர் அருகே தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை