உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில்களில் அறங்காவலர் நியமன விவகாரம்: வழக்கு முடித்து வைப்பு

கோவில்களில் அறங்காவலர் நியமன விவகாரம்: வழக்கு முடித்து வைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக கோவில்களில் அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.'தமிழக கோவில்களில் நடக்கும் முறைகேடுகளை கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும்' என, 'ஹிந்து தர்மா' என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு, கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக சட்ட விதிகளுக்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தமிழக அரசு தெரிவித்தது.இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ராஜேஷ் பிண்டல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், ''ஹிந்து அறநிலைய துறைக்கு கீழ் உள்ள, 31,163 கோவில்களில், 11,982 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் முடிந்து விட்டது. 4,843 கோவில்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு நியமன பணிகள் நடக்கின்றன. ''மற்ற கோவில்களில் அறங்காவலர் நியமனத்துக்கான விளம்பரங்கள் கொடுக்கப்பட்டும் விண்ணப்பங்கள் வரவில்லை. விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று, தெரிவித்தார். அதை ஏற்று நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்ததுடன், 'இந்த விவகாரத்தில் ஏதேனும் கூடுதல் கோரிக்கை இருந்தால், மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம்' என்று, தெரிவித்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

KUMARAN TRADERS
மார் 04, 2025 13:40

இந்த தீர்ப்பை நீதிபதிகள் சரியாக விசாரிக்கவில்லை என்றால் இறைவா குடும்பத்துக்கும் தண்டனை கொடு ஒரு இந்த மாதிரி தவறு செய்யும் நீதிபதிகளுக்கு தண்டனை கொடுப்பாயாக இறைவா முருகா கணேசா சிவனே போற்றி


R K Raman
மார் 04, 2025 12:05

கோயில் விவரங்களுக்கு மத்திய அரசுக்கு சட்டம் இயற்றும் உரிமை உண்டு என்றாலும் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? ஏன் மத நம்பிக்கை இல்லை என்றாலும் அறங்காவலராக நியமனம் நடக்கும் வாய்ப்பு உள்ளது? துறையில் ஹிந்து அல்லாதவர்கள் உள்ளனரா? எப்படி?


Rajan A
மார் 04, 2025 05:13

யார் யார் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்ற கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும். துறை அதிகாரிகளா இல்லை பொது மக்களா? உண்டியை அவ்வளவு சீக்கிரம் விட்டு கொடுப்பதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை