உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

பொது நுாலக இயக்குனராக இருந்த இளம்பகவத், துாத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, பொது நுாலக இயக்குனர் பதவி கூடுதல் பொறுப்பாக, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குனர் சங்கரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை, பள்ளி கல்வித்துறை செயலர் மதுமதி வெளியிட்டுள்ளார்.மருந்தியல் பட்டய படிப்பு என்ற டி.பார்ம் முடித்தவர்கள், பி.பார்ம்., படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, www.tnhealth.tn.gov.in/ www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில், செப்டம்பர் 9 மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். தரவரிசை பட்டியல், இடங்கள் ஒதுக்கீடு போன்ற விபரங்கள் இணையதளத்தில் தெரிவிக்கப்படும் என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ