உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.5 கோடியாவது வேண்டும்; எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை

ரூ.5 கோடியாவது வேண்டும்; எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை

சென்னை: 'எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை, குறைந்தது 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்' என, எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.சட்டசபையில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரின்ஸ் பேசும் போது, ''எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை, 3 கோடி ரூபாயில் இருந்து, 10 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். கர்நாடகா, கேரளா மாநிலங்களில், 5 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. எம்.எல்.ஏ.,க்களுக்கு பி.ஏ., நியமிக்கின்றனர். தமிழகத்தில் குறைந்தது 5 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்,'' என்றார்.அதற்கு பதில் அளித்த அமைச்சர் பெரியசாமி, ''இதற்கே, 700 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது. முதலில் கருணாநிதி, 25 லட்சம் ரூபாயில் துவக்கினார்,'' என்றார்.ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., சதன் திருமலைகுமார், தொகுதி நிதியை 6 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவம், 5 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R SRINIVASAN
ஜூன் 23, 2024 07:58

காங்கிரெஸ்க்காரனின் சுயரூபம் வெளிப்பட்டுவிட்டது . கள்ளக்குறிச்சியில் பட்டியலினத்தவர்கள் செத்து கொண்டிருக்கிறார்கள். இதைப்பத்ரி சோனியாவோ, ராகுலோ, ப்ரியங்காவோ அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. இந்த மனிதநேயமற்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு குட்டிச்சுவர். கேரளா மக்கள் பிரியங்காவை தோற்கடிக்கவேண்டும்


S Sivakumar
ஜூன் 23, 2024 07:24

நல்ல முயற்சி மக்களுக்கு இந்த நிதியை பயன்படுத்தி பயன் பெறும் போது. ஆனால் நம்முடைய சட்ட சபை உறுப்பினர்கள் அந்த நிதியை தன் சுய சேமிப்பு நிதியாக மற்ற பழக்கம் ஏற்பட்டதன் விளைவு தான் பார்க்க முடிகிறது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை