உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 29ம் தேதி வரை மிதமான மழை

29ம் தேதி வரை மிதமான மழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே நிலை, வரும் 29ம் தேதி வரை நீடிக்கும். மன்னார் வளைகுடா, தென் மாவட்ட கடலோரம் மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில், வரும் 27 வரை மணிக்கு, 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும் இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசும். வடக்கு ஆந்திர கடலோரம், வங்கக் கடலின் சில பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை