உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு

மதுரையில் ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: மதுரையில் ஜூன் 22ல், முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:சங்க இலக்கியங்கள் வணங்கும் குறிஞ்சி நில தெய்வம், தமிழ் கடவுள் முருகபெருமானின் லட்சக்கணக்கான பக்தர்களை ஒருங்கிணைக்கும் வகையில், ஜூன் 22ல், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இதில், ஐந்து லட்சம் பக்தர்களை பங்கேற்க வைக்க முயற்சி நடக்கிறது.ஹிந்து தர்மத்தை, கோவில்களை, பண்பாட்டை காக்க, முருக பக்தர்கள் ஒருங்கிணைய வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். இதற்காக ஜூன் 22ல், முருக பக்தர்கள் மாநாட்டை நடத்த ஹிந்து முன்னணி முடிவு செய்துள்ளது. மாநாட்டில் பங்கேற்க வீடு வீடாக சென்று முருக பக்தர்களை அழைக்கவும், மாநாட்டின் நோக்கத்தை மக்களுக்கு விளக்கவும், பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

orange தமிழன்
மார் 08, 2025 14:39

நல்ல முயற்சி.....மாநாடு நல்ல முறையில் நடக்க முருகனை வேண்டுவோம்......... முருகனுக்கு அரோகரா.......


Mahendran Puru
மார் 08, 2025 13:36

முருக பக்தியை மனதில் வையுங்கள். மாநாடு நடத்தி இந்துத்வ துவேஷத்தை வளர்க்க வேண்டாம். விட்டெறியப்படும் சில்லறைக்கு கூவும் கூட்டம் மாநாடு நடத்துதாம்.


saravan
மார் 08, 2025 08:22

.ஹிந்து மக்கள் ஒன்று கூடினால் உங்களுக்கு பிடிக்காதே...அதெப்படிம்மா...ஒரு துண்டு அப்பத்துக்கு மாறிட்டு, ஒட்டுமொத்த தேசத்தையே எதிரியா நினைக்கிறீங்க...வேற நாடுகள்ல இதுபோல் பேச முடியுமா...???


Kasimani Baskaran
மார் 08, 2025 07:33

திராவிடத்துக்கு வந்த சோதனை..


Oviya Vijay
மார் 08, 2025 01:08

களேபரம் பண்றதுக்கு ஒரு மாநாடு அப்படின்னு சொல்லுங்க... ஒரு ஊரு ஒரு மாநிலம் எல்லா மதத்தினரோட அனுசரணையா அன்பா சந்தோசமா இருந்தா உங்களுக்கு பிடிக்காதே... எப்போ தான் யா திருந்துவீங்க...


Amar Akbar Antony
மார் 08, 2025 11:15

அதென்னப்பா அப்படியே பொங்குறீங்க ஒரு ஊரு தான்.. ஒரு மாநில மக்கள் தான். ஆனா அந்த கோவிலையே எங்களோட இடம் ஊரெய் எங்களோடது என்கிறான் எங்கிருந்தோ எவனோ ஒருத்தன் சொன்னான் என்று ஊரையே பகைத்து அன்னியனுடன் சேர்ந்து ஊரையும் ஊர்மக்களையும் எதிர்க்கும்போது எங்கே போனாய்? இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் வேண்டுமென்றானாம்


புதிய வீடியோ