பழநி: ''அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றிடைந்துள்ளது ''என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.பழநியில் அவர் கூறியதாவது:தமிழக முதல்வராக ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 39 மாதங்களில் கோவில்கள் வளர்ச்சிக்காகவும், ஆன்மிக அன்பர்களின் அடிப்படை தேவைகளை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைத்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. மாநாட்டின் முதல் நாளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.1.25 லட்சம் பக்தர்களுக்கு முதல் நாள் மாநாட்டில் உணவு வழங்கப்பட்டது. 50ஆயிரம் பேருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார் உன்னதமான நிகழ்வை அரங்கேற்றிய அரசு ஐகோர்ட் நீதிபதி பாராட்டு
“முருகன் பெயரை சொன்னாலே தமிழ் மாநாடு தான். தமிழுக்கு மாநாடு நடத்தினாலே அது முருகனுக்கான மாநாடு தான்,” என, உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேசினார்.திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது:உலகஅளவில் முருகனின் பெயரை தாங்கி நடக்கிற மாநாடு இதுவாக தான் இருக்கும். பாராட்டு
என்ன காரணத்திற்காக, தமிழோடு முருகனை இணைத்து மாநாடு நடத்துகின்றனர் என்ற கேள்வியை நேற்று பலர் எழுப்பினர்.முருகன் பெயரை சொன்னாலே தமிழ் மாநாடு தான். தமிழுக்கு மாநாடு நடத்தினாலே, அது முருகனுக்கான மாநாடு தான் என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு போய்விடலாம். பல கருத்துகள் சமூகத்தில் உள்ளன. இவர்கள் எதற்கு மாநாடு நடத்துகின்றனர். இவர்களுடைய கொள்கைக்கு ஏற்றதா என்று கேள்விகள் கேட்கலாம்.எல்லாருக்குமான ஒரே பதில் இறையை உணர்ந்து, தமிழை அறிந்து, உணர்ந்து, முருகனை அறிந்து, முருகனின் வீர பராக்கிரமங்களை அறிந்து, தமிழ் மொழியின் செழுமையை உணர்ந்து, முருகன் தான் தமிழ், தமிழ் தான் முருகன் என்று உணர்ந்து, இன்றைக்கு இந்த மாநாட்டை நடத்தி உள்ள அரசும், அறநிலையத்துறையும் பாராட்டிற்குரியது.மொத்தம், 36 இலக்கியங்களைக் கொண்ட சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு தான், மிக மூத்த இலக்கியமாக உள்ளது. அந்த பத்துப்பாட்டில் முதன்மை பாட்டாக வைக்கப்பட்டுள்ளது திருமுருகாற்றுப்படை. முருகன் ஆற்றுப்படை
இந்த மாநாட்டை உலக முத்தமிழ் முருகன் மாநாடு என்று சொல்வதற்கு பதிலாக, உலக முத்தமிழ் முருகன் ஆற்றுப்படை மாநாடு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.அப்படிப்பட்ட ஒரு உன்னதமான நிகழ்வை தமிழ் மண்ணிலே இன்றைக்கு அரங்கேற்றி இருக்கும் அரசை பாராட்டுகிறேன்.அறநிலையத் துறையை பாராட்டுகிறேன். முருகனுடைய புகழும், வெற்றியும் தொடரட்டும். இந்த மாநாட்டின் மூலமாக தமிழ் வென்றிருக்கிறது. முருகன் வென்று இருக்கிறான்.இவ்வாறு அவர் பேசினார். முருகன் மாநாட்டில் 285 கட்டுரைகள் தேர்வு
பழனியில் நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில், 1,500க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்ட நிலையில், 285 கட்டுரைகள் தேர்வாகி உள்ளன.மாநாட்டில், தமிழகம், வெளிமாநிலம், இங்கிலாந்து, துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அறிஞர்கள், ஆய்வாளர்கள் வாயிலாக, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் முருகன், நவ பாஷாண முருகன், அழகன் முருகன், பாதயாத்திரையில் முருகன், தமிழ்க் கடவுள் முருகன், முருகனும் முத்தமிழும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், முருகன் சம்பந்தமான, 1,500 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.ஆய்வுக் கட்டுரைகள் குறித்து விவாதிக்க வாரியார் அரங்கம், பாம்பன் சுவாமிகள் அரங்கம், வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள் அரங்கம் உட்பட ஐந்து ஆய்வு அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விருதுகள் பெற்றவர்கள் விபரம்
முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிகம் மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில், 16 பேருக்கு முத்தமிழ் முருகன் மாநாட்டின் நிறைவு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.அவர்கள் விபரம்:போகர் சித்தர் விருது:மருத்துவர்கு.சிவராமன்நக்கீரர் விருது:பெ.சுப்பிரமணியம்அருணகிரிநாதர் இயல் விருது:திருப்புகழ் மதிவண்ணன்அருணகிரிநாதர் இசை விருது:வி.சம்பந்தம் குருக்கள்முருகம்மையார் விருது:மறவன்புலவு க.சச்சிதானந்தன்குமரகுருபர சுவாமிகள் விருது:பனசை மூர்த்திதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் விருது: -பா.மாசிலாமணிபகழிக்கூத்தர் விருது:ஜெ.கனகராஜ்கந்தபுராணக் கச்சியப்பர் விருது:வ.ஜெயபாலன்வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் விருது:ந.சொக்கலிங்கம்மாம்பழக் கவிச்சிங்க நாவலர் விருது:புலவர்.அமுதன்சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் விருது:சே.பார்த்தசாரதிபாம்பன் சுவாமிகள் விருது:தா.சந்திரசேகரன்தணிகைமணி வ.சு.செங்கல்வராயர் விருது:வ.செ.சசிவல்லிதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் விருது:சொ.சொ.மீ.சுந்தரம்தேனுார் வரகவி வே.செ.சொக்கலிங்கனார் விருது:மா.திருநாவுக்கரசு.