உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமநாதபுரத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க.,வை முந்திய நாம் தமிழர் கட்சி

ராமநாதபுரத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க.,வை முந்திய நாம் தமிழர் கட்சி

ராமநாதபுரம்:ராமநாதபுரம் லோக்சபா தொகுதி தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெய பெருமாள் டெபாசிட்இழந்துள்ள நிலையில் நான்கு சட்டசபை தொகுதிகளில் நாம்தமிழர் கட்சியை விட குறைவான ஓட்டு வாங்கியதால் அ.தி.மு.க., தொண்டர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கு 17 முறை தேர்தல் நடந்துள்ளது. இதில் அ.தி.மு.க., 4 முறை வென்றுள்ளது. தற்போது ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெய பெருமாள் 99,780 ஓட்டுகள் பெற்று டெபாசிட் இழந்து மூன்றாமிடம் பெற்றார். இவரை விட 2108 ஓட்டுகள் குறைவாக பெற்று நாம்தமிழர் கட்சி டாக்டர் சந்திர பிரபா 97,672ஓட்டுகளுடன்4 ம் இடம் பிடித்தார்.அதே சமயம் அறந்தாங்கி, பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம் ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளரை விட கூடுதல் ஓட்டுகள் பெற்று நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கு அ.தி.மு.க.,4ம் இடத்தில்உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஜூன் 07, 2024 10:20

தேசமும் வேகமும் இரண்டு கண்கள் என மூலங்கிய தேவர்மகனார் முத்துராமலிங்கம் அவர்கள் போட்டியிட்ட தொகுதி இது. இன்று எவர் எவரோ ஜெயிக்கவிக்க படுகின்றனர். ஜோதிர்லிங்க கோவிலான ராம்நாத் அமைந்துள்ள ராமேஸ்வரம் இந்த தொகுதியில் உள்ளது. உலகின் பழமையான கோவிலான மங்கலநாதர், உத்திரகோசமங்கை உள்ளது. இதில் ராமநாத சேதுபதி அவர்களும் வென்ற தொகுதி. மக்களுக்கு விபரங்கள் தெரிந்தால் சரி


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ