உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 நாள் முன்பே நீட் தேர்வு முடிவு: மருத்துவ விண்ணப்பம் எப்போது?

10 நாள் முன்பே நீட் தேர்வு முடிவு: மருத்துவ விண்ணப்பம் எப்போது?

திருப்பூர் : 'நீட்' தேர்வு முடிவு கள் பத்து நாள் முன்பே வெளியானதால், மருத்துவக்கல்லுாரியில் சேர்வதற்கான விண்ணப்பம், கவுன்சிலிங் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹாேமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தேசிய தேர்வுகள் முகமை மூலம் மருத்துவ நுழைவு தேர்வு (நீட்) நடத்தப்படுகிறது.நடப்பாண்டு 'நீட்' தேர்வு மே 5ம் தேதி நடந்தது. நாடு முழுதும், 24 லட்சம் பேரும், தமிழகத்தில், 1.5 லட்சம் பேரும் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 14ல் வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், முன்னறிவிப்பின்றி, லோக்சபா தேர்தல் முடிவு வெளியான 4ம் தேதி இரவோடு இரவாக வெளியிடப்பட்டது. பத்து நாள் முன்பே முடிவு வெளியானதால், மருத்துவக்கல்லுாரியில் சேர்வதற்கான விண்ணப்பம், கவுன்சிலிங் எப்போது என்பது குறித்த ஐயப்பாடுகள் மருத்துவக் கனவுடன் காத்திருக்கும் மாணவ, மாணவியர் மத்தியில் எழுந்துள்ளது.'நடப்பு வாரத்தில் தான் அகில இந்திய அளவிலான மருத்துவ விண்ணப்பம், கவுன்சிலிங் குறித்த தகவல்கள் வெளியாகும். அதற்கேற்பவே மாநில அளவிலான கவுன்சிலிங் நடைமுறை, அடுத்த கட்ட அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது,' என, உயர்கல்வி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sampath Kumar
ஜூன் 10, 2024 12:03

இந்த முறை நடத்த இந்த நாசகார தேர்வு உண்மையில் பலரையும் கொதிப்பு அடைய செய்து உள்ளது எப்படி 600 பெயர்கள் 100 /100 வாங்கி உள்ளார்கள் அதுவும் வரிசையான தெரு எண்கள் கொண்டவர்கள் வெற்றி பெற்றது எப்படி பதில் வரத்து இந்த தேர்வெ தண்ணீர் டியூஷன் சென்றதும் தனியார் மருத்துவ கல்லூரிகளும் மக்களிடம் கொள்ளை அடிக்கவே பெரிதும் பயன்படுகின்றன இதைத்தான் கொள்ளையர்கள் விரும்புகிறார்கள் போல அது சரி டாப் டு பாட்டம் ஊழல் ஊழலால் அரசு வலுக்கிறது மாணவர்கள் சாகின்றார்கள் என்ன ஒரு கொடுமை


Vathsan
ஜூன் 10, 2024 09:41

நீட் கேள்வித்தாள் வெளியாகியதாக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்படுகிறது. நீட் 2024 scam நடந்ததாக, ஒரே மையத்தில் 10 பேர் வரிசையாக AIR முதலிடம். 67 பேர் முதலிடம் இந்த முறை. மொத்த மதிப்பெண் 718, 719 எப்படி சாத்தியம். வட மாநில மாணவர்களுக்கு கிரேஸ் மதிப்பெண், ஆனால் நமது மாணவர்களுக்கு கிடையாதா. எப்படி எப்படி எல்லாம் நமது மாணவர்களை வஞ்சிக்கிறார்கள். ஆளுங்கட்சி தூங்குகிறதா. இவ்வளவு முறைகேடுகள் இருந்தும், இன்னும் மறுதேர்வு நடத்தாதது ஏன். உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இதை விசாரிக்க வேண்டும்.


hari
ஜூன் 10, 2024 11:27

அது எல்லாம் படிச்சவங்க பாத்துப்பாங்க வதசன்.... no டென்ஷன்


ஆரூர் ரங்
ஜூன் 10, 2024 09:33

கவுன்சலிங் அடுத்த கல்வியாண்டு முடியும் வரை தொடரலாம். அதற்குள் நூறு வழக்குகளை போடுவர்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ