உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புது ரேஷன் கார்டுகள் விரைவில் வினியோகம்

புது ரேஷன் கார்டுகள் விரைவில் வினியோகம்

சென்னை:'ரேஷன் கார்டு வழங்குவதில் எவ்வித தாமதமும் இல்லை. தகுதியுள்ள அனைவருக்கும் புதிய கார்டு விரைந்து வழங்கப்படும்' என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற பின், இதுவரை, 15.94 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்காலிக நிறுத்தம்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான பயனாளிகள், ரேஷன் கார்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கு எடுக்கப்பட்டதை ஒட்டி, 2023 ஜூலை 6 முதல், புதிய கார்டுக்கு ஒப்புதல் அளிப்பதும், அச்சடிக்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.ஆனாலும், 'மிக்ஜாம்' புயல் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், 17,197 கார்டுகள், கடந்த டிசம்பரில் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், 10,380 கார்டுகள் வழங்கப்பட்டன.இந்தாண்டு மார்ச்சில், 45,509 கார்டுகள் வழங்கப்பட்டன. லோக்சபா தேர்தலால் விண்ணப்பம் சரிபார்க்கும் பணி முடங்கியது. இதுவரை பெறப்பட்ட, 2.89 லட்சம் விண்ணப்பங்களில், 1.63 லட்சம் கள விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, 92,650 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தாமதம் இல்லை

அதில், 24,657 கார்டு அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. ஒப்புதல் அளிக்கப்பட்ட இதர விண்ணப்பங்களுக்கும் புதிய கார்டுகள் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன.சிலர் கூறுவது போல, ரேஷன் கார்டு வழங்குவதில் எவ்வித தாமதமும் இல்லை. விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி