உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வினியோகம்

புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வினியோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ரேஷன் கார்டு வழங்குவதில் எவ்வித தாமதமும் இல்லை. தகுதியுள்ள அனைவருக்கும் புதிய கார்டு விரைந்து வழங்கப்படும்' என, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற பின், இதுவரை, 15.94 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான பயனாளிகள், ரேஷன் கார்டை அடிப்படையாக கொண்டு கணக்கு எடுக்கப்பட்டதை ஒட்டி, 2023 ஜூலை 6 முதல், புதிய கார்டுக்கு ஒப்புதல் அளிப்பதும், அச்சடிக்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.ஆனாலும், 'மிக்ஜாம்' புயல் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், 17,197 கார்டுகள், கடந்த டிசம்பரில் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், 10,380 கார்டுகள் வழங்கப்பட்டன.இந்தாண்டு மார்ச்சில், 45,509 கார்டுகள் வழங்கப்பட்டன. லோக்சபா தேர்தலால் விண்ணப்பம் சரிபார்க்கும் பணி முடங்கியது. இதுவரை பெறப்பட்ட, 2.89 லட்சம் விண்ணப்பங்களில், 1.63 லட்சம் கள விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, 92,650 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில், 24,657 கார்டு அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. ஒப்புதல் அளிக்கப்பட்ட இதர விண்ணப்பங்களுக்கும் புதிய கார்டுகள் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன.சிலர் கூறுவது போல, ரேஷன் கார்டு வழங்குவதில் எவ்வித தாமதமும் இல்லை. விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பெரிய குத்தூசி
ஆக 25, 2024 12:08

தலைமுறை தலைமுறைகளாக தமிழ்நாட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர் ஒருவரின் குடும்பம் தனிவீட்டில் வசிப்பவர்களுக்கு கடந்த 15 வருடங்களாக ரேஷன் கார்டு தேவை ஏற்படவில்லை. ரேஷன் கார்டு தேவையின் அடிப்படையில் அனைத்து உண்மை பத்திரங்களுடன் ஒன்னரை வருடத்திற்கு முன்பு விண்ணப்பித்த ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்க படுகிறது. ரேஷன் கார்டு வழங்கும் அலுவலகத்தை அணுகி விபரம் கேட்டால் அந்த அலுவலர் மற்றொரு நபராது மொபைல் என்னை அளித்து அவரை தொடர்பு கொள்ள சொல்கிறார். மாலிக் என்பவரை தொடர்புகொண்டால் தொடர்பு கொண்டால் ருபாய் 5000 நீங்கள் எனக்கு கொடுத்தால் நான் ஒரே நாளில் ரேஷன் கார்டு approval வாங்கி தருகிறேன் எனக்கூறுகிறார். இந்த குறிப்பிட்ட நபர் யார் என்று விசாரித்தால் பங்களாதேஷ் ல் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் குடியேறி ஆதார் கார்டு, வோட்டர் id, ரேஷன் கார்டு என முறைகேடாக வாங்கி இங்கு செட்டில் ஆகி உள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து பூர்வீகமாக கொண்ட இந்திய குடிமகன் குடும்பத்திற்கு பங்களாதேஷ் லிருந்து சட்டவிரோதமாக குடியேறிய நபர் இந்திய குடிமகனுக்கு ரேஷன் கார்டு வழங்குவதா இல்லையா என முடிவு செய்கிறார். விடியா திமுக அரசின் கேவலமான நிர்வாகத்தில் இந்திய குடிமகனின் இன்றய நிலைமை இதுதான். இந்த பிரச்சினையை ஆதாரத்துடன் வெளியிடவும் தயார்.


jayvee
ஆக 25, 2024 11:12

ரேஷன் கார்ட் விஷயத்தில் தமிழக அரசு தினமும் பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறது.. தனியாக வசிக்கும் நபர்களுக்கு ரேஷன் அட்டை கொடுப்பதில்லை .. அவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி.. அப்படியே கொடுத்தாலும் பொருட்கள் இல்லா அட்டைகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு கொடுக்கப்படுகிறது.. ஏன் ஒற்றையாக வாழ்பவர்கள் பசியில் செத்தால் பரவாயில்லையா ? முட்டாள்தனத்தை உச்சம் இந்த அரசாணை


Jeeva
ஆக 25, 2024 08:47

My card is approved on may 2023. Still printing machine repair they are saying


R.RAMACHANDRAN
ஆக 25, 2024 07:19

லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகள் கள ஆய்வு ஏதும் செய்யாமல் வழங்குவதுதான் தகுதியானவர்களுக்கு வழங்குவதா.


கோவிந்தர சு
ஆக 25, 2024 07:02

இல்ல அன்சரே எனக்கு இல்ல முயன்று பாத்து விட்டுட்டேன் நாசமா போகட்டுமனு


Prabakaran J
ஆக 25, 2024 06:42

I applied one year ago...worst gov


முக்கிய வீடியோ