உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., பேனர்களில் புகைப்படங்கள் சைஸ் கட்சி நிர்வாகிகளுக்கு புது கட்டுப்பாடு

அ.தி.மு.க., பேனர்களில் புகைப்படங்கள் சைஸ் கட்சி நிர்வாகிகளுக்கு புது கட்டுப்பாடு

கோவை: அ.தி.மு.க., சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு வைக்கப்படும் பேனர்களில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்கள் எந்தெந்த சைஸில் இருக்க வேண்டுமென்கிற அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தியதற்காக, கடந்த மாத துவக்கத்தில், கோவை மாவட்டம் அன்னுாரில், அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமிக்கு, பாராட்டு விழா நடத்தப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tj7ldhvp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதற்கான அழைப்பிதழிலும், மேடையிலும் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., - ஜெ., புகைப்படங்கள் இடம் பெறவில்லை என்கிற காரணத்தை சுட்டிக்காட்டி, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகளில் ஒருவரான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதனால், அ.தி.மு.க.,வுக்குள் சலசலப்பு ஏற்பட்டது.அதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டங்களில், பழனிசாமியை கட்சியின் பொது செயலாளர் என்றே செங்கோட்டையன் குறிப்பிடுகிறார்; பெயரை குறிப்பிடுவதில்லை. ஈரோட்டில் நடந்த விழா மேடையில், பழனிசாமிக்கு நிகராக செங்கோட்டையன் படம் அச்சிடப்பட்டு இருந்தது. பொதுக்கூட்ட மேடைகளில், தன்னுடைய அனுபவத்தையும், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ.,வுடனான நெருக்கத்தையும் தவறாமல் செங்கோட்டையன் பதிவு செய்கிறார். இது, கட்சிக்குள் பேசும் பொருளானது.செங்கோட்டையன் செயல்படும் விதம், அவரது பேச்சு குறித்து, கட்சியின் பொது செயலாளரான பழனிசாமி பதிலளிக்கவில்லை; கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதேநேரம், பழனிசாமிக்கு நிகராக, செங்கோட்டையன் படம் அச்சிடுவது, நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.இதைத்தொடர்ந்து, கட்சி சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைக்கும்போது, நிர்வாகிகளின் புகைப்படங்களை எந்தெந்த சைஸில் அச்சிட வேண்டும் என்கிற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஜெ.,க்கு நிகராக இ.பி.எஸ்.,

அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பேனர், போஸ்டர் அச்சடிக்கும்போது, எத்தகைய நடைமுறை பின்பற்ற வேண்டுமென்கிற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பேனர் ஒரு பகுதியில் இரட்டை இலை இடம் பெற வேண்டும். அண்ணாதுரை படம் சிறிய அளவில் இருந்தால் போதும்; எம்.ஜி.ஆர்., படம் அதை விட பெரியதாக இருக்க வேண்டும்.பேனரின் ஒரு புறம் ஜெ., படம் பெரிதாக இருக்க வேண்டும்; அதற்கு நிகராக பொது செயலாளர் பழனிசாமி மட்டும், அதே சைஸில் இடம் பெற வேண்டும். அதற்கு கீழ் தலைமை கழக நிர்வாகிகள் படமும், அதை விட சற்று சிறிதாக, மாவட்ட செயலாளர் படமும் இருக்க வேண்டும். மற்ற நிர்வாகிகளின் படங்கள், ஒரே சைஸில் வரிசையாக கீழ்ப்பகுதியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Mecca Shivan
மார் 02, 2025 13:47

இதற்க்கு காரணம் MGR மற்றும் ஜெயலலிதாவிற்கு மட்டுமே தலைமைக்கான தகுதியும் களையும் இருந்தது ..அந்த ஆளுமை முகத்திலும் இருந்தது .. கருணாநிதி அதை செயற்கையாக காட்ட MGR உடன் போட்டியிட தானும் கருப்பு கண்ணாடி அணிந்தார் . ஸ்டாலினும் விக் அணிகிறார் ..பாவம் எடபடிக்கு ஆளுமையும் இல்லை முகத்தில் ஒரு களையும் இல்லை ..அதுவம் sdpi அழுத்தத்தில் அவருக்கென இருந்த ஒரே அடையளமான விபூதி குங்குமத்தை அழித்து விதவை போல இருக்கும் எடப்பாடிக்கு இப்படி தனது படத்தை மட்டும் பெரிதாக போட்டால்மட்டுமே மக்கள் அந்த போஸ்ட்டரை பார்ப்பார்கள் என்று தெரிந்துவிட்டது ..


Barakat Ali
மார் 02, 2025 10:29

2021 இல் திமுக ஆட்சியமைக்காமல் அதிமுக ஆட்சியமைத்திருந்தால் இந்தச்செய்தியில் அதிமுகவுக்குப் பதிலாக திமுகவின் பெயர் இடம்பெற்றிருக்கும் ..... ஒரு புறம் ஸ்டாலின் படம் பெரிதாகவும், அவருக்குப் பின்பக்கம் அல்லது மறுபுறம் கருணாநிதி, அண்ணா, ஈவேரா படங்கள் அருகருகே முக அளவு ஒரே சைசில் இடம்பெறவேண்டும் என்கிற விதி வந்திருக்கும் ......


kumar
மார் 02, 2025 09:56

இது ரொம்ப முக்கியம்,


Oviya Vijay
மார் 02, 2025 09:53

ரொம்ப முக்கியம்... இது ஒன்று தான் குறைச்சல் இவர்களுக்கு... தலையில அடிச்சுகிறணும் போல இருக்கு... 2026 தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தில் அனைத்து மீடியாக்களும் பேசப்போகும் டாபிக் என்ன தெரியுமா? MGR உருவாக்கி ஜெயலலிதா கட்டிக்காத்த ஒரு மாபெரும் இயக்கத்தின் வீழ்ச்சியைப் பற்றியது தான். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 2026 தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளில் என் வாக்கு பலித்திருக்கும். இனி இந்தக் கட்சி சிதறித் தான் போகுமேயன்றி மக்களின் நம்பிக்கைக்கு உரித்தான ஒரு தலைவர் கூட அந்த கட்சியிலிருந்து இனி உருவாகப் போவதேயில்லை...


தத்வமசி
மார் 02, 2025 09:47

எடப்பாடி இப்போதும் தன்னையே முன்னிறுத்துகிறார். ஜெயலலிதாவின் புகழை மறைத்து தன்னை வெளிப்படுத்தினார். ஆனால் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அவரை விடவில்லை. இப்போது வேறு வழியில் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். இவரால் கட்சியா ? கட்சியால் இவரா ? எம்ஜியாரால் கட்சி, ஜெயலலிதாவால் கட்சி. அப்படி பார்க்கையில் எடப்பாடியால் கட்சியா ? தொண்டர்களால் கட்சியா ? அந்த அளவுக்கு இவர் கட்சியை வளர்த்து விட்டாரா ? தன்னால் தான் கட்சி என்று எடப்பாடி நினைக்கிறார்.


sethu
மார் 02, 2025 14:47

நமது ராஜா ஹந்திரங்கள் அனைத்தும் வீணாக போய்விடடதே . கட்சி உனக்கு ஆட்சி எனக்கு என ஸ்டாலினிடம் ஒப்பந்தம் போட்ட்து எடப்பாடி பழனிசாமி . திமுகவின் பி டீம் இவனாகத்தான் இருப்பார்


Gnana Subramani
மார் 02, 2025 09:18

தேர்தலில் வென்ற அண்ணா, எம் ஜி ஆர் இவர்களை விட எல்லா தேர்தல்களிலும் கட்சியை தோற்க வைத்த எடப்பாடி பெரியவர் தான்


naranam
மார் 02, 2025 09:15

அதிமுக வின் முடிவுரை ஆரம்பிக்கப்பட்டு விட்டது, ஒபி எஸ் மற்றும் இபிஎஸ் ஆகியவர்களலால்.


Venkateswaran Rajaram
மார் 02, 2025 08:51

கேடுகெட்ட திருட்டு திராவிட கும்பல்... மக்களுக்கு தரமாக எப்படி செய்ய வேண்டும் என்பதை யோசிக்க மாட்டார்கள்... தங்கள் குடும்ப ம் உறுப்பினர்களுக்காக எப்படி கொள்ளை அடிக்க வேண்டும் எவ்வாறு சொத்து சேர்க்க வேண்டும் என்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்ட திராவிட திருட்டு கும்பல்


எவர்கிங்
மார் 02, 2025 07:54

வெட்டி/உதாவாக்கரைகளுக்கு சட்டதிட்மாம்


Kasimani Baskaran
மார் 02, 2025 07:04

கம்முனிசத்தின் எச்சம் போன்ற கோட்பாடுகளை உடையது திராவிடம். அதை தைரியமாக சொல்ல மாட்டார்கள் - ஏனென்றால் ஓட்டு வாங்க முடியாது. தானாக உதிக்கும் / அல்லது திணிக்கப்படும் சர்வாதிகாரி இல்லை என்றால் தலைமைக்கு பஞ்சமாகிவிடும். இவர்கள் சிறப்பான நிர்வாகிகள் என்று நம்புவதைப்போன்ற கோமாளித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை