உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெக்ஸ்ட் தேர்வு இந்தாண்டு அமல்: வழிகாட்டுதல் வெளியீடு

நெக்ஸ்ட் தேர்வு இந்தாண்டு அமல்: வழிகாட்டுதல் வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இந்தாண்டு முதல், 'நெக்ஸ்ட்' தேர்வு நடத்தப்பட உள்ளதாக, தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து உள்ளது.இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிக்க, 'நீட்' தேர்வு கட்டாயம். அதேபோல, இளநிலை மருத்துவம் முடித்த பின், முதுநிலை மருத்துவம் படிக்க வேண்டும் எனில், அதற்கான நீட் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்து, இந்தியாவில் சேவையாற்ற வருவோர், அதற்காக நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்நிலையில், பயிற்சி மருத்துவர் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் வெளிநாட்டு மருத்துவ படிப்பை முடித்தோருக்கான தகுதி தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 'நெக்ஸ்ட்' என்ற தேசிய தகுதி தேர்வை, இரண்டு கட்டங்களாக நடத்த, தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்தது.அதன்படி, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்கள், நெக்ஸ்ட் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பயிற்சி டாக்டராக முடியும். பின், நெக்ஸ்ட் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேரவும், மருத்துவ சேவைகளிலும் ஈடுபடவும் முடியும்.வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களும், இந்தியாவில் மருத்துவம் பார்க்க அளிக்க, நெக்ஸ்ட் 2 தேர்வு எழுதுவது கட்டாயம். கடந்த கல்வியாண்டில், இத்தேர்வை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டில் அதை அமல்படுத்த, தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்து, அதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

peria samy
செப் 02, 2024 11:09

கொஞ்சம் புரிஞ்சு பேசுங்க சாரே .... 12 ம் வகுப்பு வரை படிக்கணுமாம் அப்பொறம் நீ படிச்சது எல்லாம் வேஸ்ட் என்று சொல்லி நீட் எழுதினால் தான் MBBS படிக்கலாம்னு சொல்லுவாங்க. MBBS படித்தவுடன் நீ படிச்சது எல்லாம் வேஸ்ட் என்று சொல்லி NEXT எழுதணும். அப்புறம் PG சேரலாம் என்று நினைத்தால் உடனே நீ படிச்சது எல்லாம் வேஸ்ட் என்று சொல்லி PG NEET எழுதணும். அணைத்து பரிட்சைக்கும் கோச்சிங் சென்டர் சேர்ந்து லட்சம் லட்சமாக பணம் கொடுத்தால் தான் இந்த பரீட்சை எழுத முடியும். இந்த கோச்சிங் சென்டர் ஆட்கள் ஒரு மாணவன் இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே மாணவனின் பெற்றோரை நச்சரிக்க ஆரம்பித்து விடுவார்கள். மொத்தத்தில் மாணவனுக்கு double tension, பெற்றோருக்கு பண விரயம். நான் அனுபவசாலி


ஆரூர் ரங்
செப் 02, 2024 13:02

அறியாமல் எழுத வேண்டாம். இந்த NEXT தேர்வு வந்த பிறகு PG NEET கிடையாது. NEXT மார்க் அடிப்படையிலேயே மேற்படிப்பு இடங்கள் கிடைக்கும். சில மாநிலங்களில் MBBS தேர்வுகளில் மார்க்கை வாரி வழங்குவதால் NEXT போன்ற தராதர தேர்வு அவசியமே.


ஆரூர் ரங்
செப் 02, 2024 06:59

அடுத்த NEXT முதல் கையெழுத்து வாக்குறுதி தயார். ஏமாற டமில் ஆளிருக்கும்வரை ஏமாற்றிக் கொண்டுதானிருப்பர்.


Duruvesan
செப் 02, 2024 05:58

விடியல் சாரே எதுனா பண்ணி தேர்வே இல்லாம எல்லாரையும் டாக்டர் ஆகிட்டு னா ஓட்டு பிச்சிக்கும். வீட்டுக்கு ஒரு டாக்டர் என்பதே தீயமுகவின் குறிக்கோள்ன்னு அடிச்சி வுடு, அடிமைகள் நம்பும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை