உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு சென்னையில் என்.ஐ.ஏ., சோதனை

பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு சென்னையில் என்.ஐ.ஏ., சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, இளைஞர்களை மூளைச்சலவை செய்த, ஹமீது உசேனின் அலுவலகத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஹமீது உசேன் என்பவர், 'டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்' என்ற பெயரில், 'யு டியூப்' சேனல் நடத்தி, அதன் வாயிலாக, 'ஹிஷாப் உத் தகீர்' என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார்.மேலும், அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து வந்துள்ளார். இதை மத்திய குற்றப்பிரிவு, 'சைபர் கிரைம்' போலீசார், மே மாதம் கண்டறிந்தனர். இதை தொடர்ந்து, ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் உட்பட ஆறு பேரை, 'உபா' என்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்று, சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, கும்பகோணம், தஞ்சை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள, 10 இடங்களில் ஜூன் மாதம் சோதனை நடத்தியது.அப்போது, மொபைல் போன்கள், லேப்டாப், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள் மற்றும் அமைப்பு தொடர்பான புத்தகங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், அல்தாம் சாகிப் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 5ம் தேதி, என்.ஐ.ஏ., வழக்கு பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டை ஜான்ஜானிக்கான் சாலையில் உள்ள ஹமீது உசேன் அலுவலகத்தில், நேற்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பேசும் தமிழன்
ஆக 18, 2024 13:54

அத்தனை தீவிரவாதிகளும் தமிழ்நாட்டில் தான் அடைக்கலமகி இருப்பார்கள் போல் தெரிகிறது ...அந்தளவு நம்பிக்கை விடியல் ஆட்சியின் மீது ....அவர்கள் மீது இந்த அரசு மென்மையான போக்கை கடைபிடித்து வருவதை தான் நடக்கும் சம்பவங்கள் காட்டுகிறது.


வாய்மையே வெல்லும்
ஆக 18, 2024 11:58

முட்டிய உடைச்சு மாவுக்கட்டு போட்டால் தான் தீவிரவாதிகள் பயங்கரவாத செயல்களின் கோட்டம் அடங்கும் ..


Gopal
ஆக 18, 2024 11:55

தமிழக உளவுத்துறை என்ன பண்ணி கொண்டுஇருக்கு. ஆகா இதுவும் ஒரு போதை கடத்தல் நிகழ்வை மொத்தமாக தூங்கி கொண்டு இருந்தது போலத்தானே? அட இவ்வளவுதானா தமிழக உலவுதுறை?


நிக்கோல்தாம்சன்
ஆக 18, 2024 10:46

மக்களின் வரிப்பணத்தில் வயிற்றை வளர்த்து அந்த மக்களுக்கே துரோகம் இழைப்பது எப்படி என்று இவர்களிடம் தான் கற்க வேண்டும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 18, 2024 09:44

பாஜகஆட்சியில்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ...... அதனால்தான் குண்டுவெடிப்பு நிகழ்வுகளும் வெகுவாகக் குறைந்துள்ளன ....


Lesly Loyans
ஆக 18, 2024 09:23

சென்னை முழுவதும் வக்ப் வாரியத்துக்கு சொந்தமான நிலம் தான் எல்லாரும் வெளியிருங்கள்ன்னு சொல்ல போறாங்க, அவங்க தீவிரவாத வேலையா மௌனமா பாத்துகிட்டுதான் இருக்கானுங்க, நடுநிலை இந்துக்களை ஆரிய பார்ப்பனர்கள், கைபர், போலன் கனவாய்ன்னு சொல்லி பிரிச்சி வச்சிக்கிட்டு தான் இருக்கானுங்க, அவங்க பெரும்பான்மை ஆகுற வரைக்கும், கடைசி வரை ஹிந்துக்களை ஒண்ணு சேர விடமாட்டானுங்க. பாகிஸ்தான் பங்களாதேஷ் இந்துக்கள் நிலைமை தான் உங்களுக்கு


VENKATASUBRAMANIAN
ஆக 18, 2024 07:37

எல்லாம் சரி நடவடிக்கை எப்போது. பாஜகவினர் இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். சும்மா டிவியில் உட்கார்ந்து பேசினால் போதாது


Kalyanaraman
ஆக 18, 2024 07:31

தற்போது பீகாரில் இருந்து முஸ்லிம்கள் வேலைக்காக ஆயிரக்கணக்கில் வந்துள்ளனர். அவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதால் அவர்களும் மூளை சலவைக்கு ஆளாகலாம். ஏற்கனவே எத்தனை ரோஹிங்கியாக்கள் உள்ளே இருக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் தேவைப்படுகிறது.


Kasimani Baskaran
ஆக 18, 2024 07:05

தமிழகம் அமைதிப்பூங்கா என்று அதிகநாள் உருட்ட முடியாது போல தெரிகிறது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை