உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில்வே திட்டங்களுக்கு தாமதம் செய்யவில்லை

ரயில்வே திட்டங்களுக்கு தாமதம் செய்யவில்லை

சென்னை : 'தமிழகத்தில், ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையப்படுத்துவதில் எந்த தாமதமும் இல்லை' என வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், மத்திய அரசின் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலம் எடுப்பதில், மாநில அரசு தாமதம் செய்வதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குற்றம் சாட்டியிருந்தார்.இதற்கு விளக்கம் அளித்து, தமிழக வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 2021 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, ரயில்வே திட்டத்திற்காக, 2,443 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தை பொறுத்தவரை, எந்த தடையுமின்றி அரசாணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் குறித்து, ரயில்வே மூத்த அதிகாரிகளுடன் மாதந்தோறும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.மேலும், சம்பந்தப்பட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலரும் ஆய்வு நடத்துகிறார். எனவே, தமிழக அரசு கால தாமதம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Saleem
ஜூலை 28, 2024 20:22

கோவை மெட்ரோ திட்டத்தில் யார் பொய் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை கோவையை தலைமையாக கொண்ட புதிய கோவை ரயில்வே கோட்டம் மாநில அரசும் சரி மத்திய அரசும் சரி வாய் திறப்பதில்லை


K.n. Dhasarathan
ஜூலை 26, 2024 21:16

ரயில்வே அமைச்சர் மட்டும் விதி விழாக்கா? தன பங்கு பொய்யை அவிழ்த்துவிடுகிறார், எந்த திட்டம் தாமதம் சொல்ல முடியுமா? நீங்கள் பணம் தராமல் ஊறப்போட்டு, ஆறப்போட்டு வைத்ததுதான் அதிகம், மதுரை சென்னை இரண்டாம் தடம் எத்தனை வருடங்கள் போடப்பட்டது தெரியுமா?, ஐம்பது வருடங்கள், வந்த பாரத் மட்டும் வந்ததே மற்ற கூடுதல் ரயில்கள் ஏன் வரவில்லை ? தமிழகம் என்றால் உங்களுக்கு கண் தெரியாது, நிதி அமைச்சருக்கு எதுவுமே ஓடாது.


venugopal s
ஜூலை 26, 2024 18:13

மத்திய பாஜக அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமே அரிச்சந்திரன்கள், சத்தியவான்கள், உண்மை மட்டுமே பேசுபவர்கள். அதனால் அவர்கள் சொல்வதை மட்டுமே நம்புவோம். மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எல்லோரும் பொய்யர்கள், அவர்கள் சொல்வதை நம்ப மாட்டோம்.


panneer selvam
ஜூலை 26, 2024 15:04

Minister KKSSR Sir , you are making only a general statement to escape from the responsibility . Railways calls for the meeting regularly with state officials just to listen your good old stories but no land has been acquired in time. We know how many year Dravidian Parties took to hand over 500 meter land stretch for Chennai MRTS to link Mount from Velacherry . Just 15 years wasted . Again still Dravidian parties could not acquire land for Coimbatore and Madurai airport runway extension . Again 12 years wasted . Maduravoyal double decker road project was jinxed by same Dravidian parties despite of good efforts of ex minister G.K.Vasan.


Indian
ஜூலை 26, 2024 17:00

ஆர் யு from பீகார் ?


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 26, 2024 09:21

இப்படி மாற்றி மாற்றி குற்றம் சொல்லி மக்களை அறிவிலி ஆக்குறீங்க. இதுதான் உங்க தந்திரம். நீங்க ஜாலியா மக்கள் பணத்துல 50 கார் புடைசூழ சொகுசு பயணம் போவீங்க. ஆனா உங்களுக்கு ஓட்டுப்போட்டு மக்கள் கடைசி வரையில் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். உங்களையெல்லாம் ....


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை