உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 ஆண்டாக மின் தடையே இல்லை: அரசு பெருமிதம்

3 ஆண்டாக மின் தடையே இல்லை: அரசு பெருமிதம்

சென்னை : தமிழக அரசு செய்திக்குறிப்பு: கடந்த மூன்று ஆண்டுகளில், 2 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 'மின்னகம்' என்ற மின் நுகர்வோர் சேவை மையத்திற்கு வந்த, 23.98 லட்சம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 99.82 சதவீதம் தீர்வு காணப்பட்டுஉள்ளது. கடந்த 2021ல் 32,595 மெகாவாட்டாக இருந்த, தமிழகத்தின் மொத்த மின் நிறுவு திறன், திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால், 36,671 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. 3,984 மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள், தமிழக மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டு, சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களின் மொத்த நிறுவுதிறன், 8,496 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.கடந்த 2021 - 2022ல், கட்டடங்களின் கூரைகள் மேல் நிறுவப்பட்ட சூரியசக்தி மின் திறனுக்காக, மத்திய அரசின் எரிசக்தி அமைச்சகம், 7.9 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி, தமிழகத்தை பாராட்டியுள்ளது. தமிழகத்தில், தனியாருக்கு சொந்தமான பழைய திறனற்ற 16.8 மெகாவாட் காற்றாலைகளை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியில், அரசு ஊக்கம் தந்துஉள்ளது. நடப்பாண்டு மின் வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையங்களில், 12.3 சதவீதம் மின் உற்பத்தி அதிகரித்து, சாதனை படைக்கப்பட்டு உள்ளது.கடந்த 2021 முதல், 54 புதிய துணை மின் நிலையங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. உயர் அழுத்த மின் பாதைகள், 3,086 கி.மீ., சுற்று நிறுவப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. ஒன்பது முக்கிய துணை மின் நிலையங்களில், 1,840 மெகா வோல்ட் ஆம்பியர் திறன் கொண்ட ரியாக்டர்கள் நிறுவப்பட்டுள்ளன.கடந்த 2021 - 22ம் நிதியாண்டில், மின் உற்பத்தி நிலையங்களின் திறமையான செயல்பாடு, வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் வழியாக, 2,745 கோடி ரூபாய்; 2022 - 23ம் ஆண்டில், 1,090 கோடி ரூபாய் சேமிப்பு ஏற்பட்டுள்ளது.மின் வாரியம் செய்து உள்ள சீர்திருத்தங்களால், மின் வினியோக அமைப்புகள் சீராக செயல்படுவதால், மூன்றாண்டுகளாக மின் தடையே இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சி சொர்ணரதி
ஜூன் 01, 2024 23:01

மின்தடை இல்லை கூசாமல் அறிவிக்கை திமுக ஆட்சியின் லட்சணம் இதுதான். அறிவிக்கைக்கு நடக்கும் நிகழ்விற்கு முரணாக இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக லோ வோல்டேஜ், மின்தடை, இரவு 10 மணிக்கு மின்தடை ஏற்பட்டு இரவு 2 மணிக்கு குறைந்து மின்சாரம் வருவதில்லை.மக்கள் அவஸ்தை பட்டு கொண்டிருக்கும் இப்படி மின்தடை இல்லை என்று கூசாமல் பொய் சொல்லுவதில் திராவிட மாடல் அரசை அடிச்சிக்க ஆள் இல்லை. நீரோ மன்னன் பீடில் வாசித்த கதை அப்படியே திராவிட மாடலுக்கும் பொருந்தும்.


மேலும் செய்திகள்