உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எந்த கோவிலையும் எந்த ஜாதியும் சொந்தம் கொண்டாட முடியாது; ஐகோர்ட் மீண்டும் திட்டவட்டம்

எந்த கோவிலையும் எந்த ஜாதியும் சொந்தம் கொண்டாட முடியாது; ஐகோர்ட் மீண்டும் திட்டவட்டம்

சென்னை: நம்பிக்கையின் பாதையை பின்பற்றுவதற்குப் பதிலாக, ஜாதி அடையாளங்களை மக்கள் சுமந்து செல்வது தான் சர்ச்சைக்கு வழிவகுப்பதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், தங்கள் தலைமையில் தான் கோவில் திருவிழா நடத்தப்பட வேண்டும் என, எந்த ஜாதியினரும் உரிமையாக கோர முடியாது என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n2z6i0om&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சுமூக தீர்வு

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் தாலுகாவுக்கு உட்பட்ட ஜமீன் எளம்பள்ளி கிராமத்தில், மகாமாரியம்மன் என்ற கோவில் உள்ளது.இந்த கோவிலில், மாசி திருவிழா நடத்த அனுமதி வழங்க கோரி, எம்.பாரத் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:தமிழ் மாதமான மாசி கடைசி செவ்வாய்கிழமை துவங்கி, 15 நாட்கள் விழா நடக்கிறது. இந்த திருவிழாவை, தங்கள் தலைமையில் தான் நடத்த வேண்டும் என, ஒரு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து, அறநிலையத் துறை தரப்பில் அமைதிப் பேச்சு நடத்தப்பட்டது. அதில், சுமூக தீர்வு எட்டப்படாததால், அறநிலையத் துறையே விழாவை நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஆண்டுதோறும் அமைதி பேச்சு நடத்தப்பட்டு, திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

கடவுள் வழிபாடு

'ஜாதி என்பது மதமல்ல' என, இந்த நீதிமன்றம் வழக்கு ஒன்றில் பிறப்பித்த உத்தரவில், ஏற்கனவே தெளிவாக சுட்டிக்காட்டிஉள்ளது. கோவில் திருவிழாவில் பங்கேற்கவும், ஒவ்வொரு பிரிவினருக்கும் அவர்களின் வழக்க மான முறையில் கடவுளை வழிபடவும் உரிமை உள்ளது.அதை மற்ற பிரிவினர் தடுக்கக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் அமைதிப் பேச்சு நடத்த வேண்டிய அவசியமில்லை. அறநிலையத் துறை அதிகாரிகள், திருவிழாவை நடத்த வேண்டும்.கடவுள் முன் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது. எந்த பிரிவினருக்கும் முன்னுரிமை வழங்காமல், திருவிழாவை நடத்த வேண்டும். தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்தப்பட வேண்டும் என, எந்த ஜாதியினரும் உரிமை கோர முடியாது.

நம்பிக்கை

மதம் என்பது ஒருவரின் ஆன்மாவை துாய்மைப்படுத்துவதே என்றும், ஆன்மாவுக்கு ஜாதி தெரியாது என்றும் கூறிய சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை உணராமல், நம்பிக்கையின் பாதையை பின்பற்றுவதற்கு பதிலாக, ஜாதி அடையாளங்களை மக்கள் சுமந்து செல்கின்றனர். இதுதான் சர்ச்சைகளுக்கு வழிவகுக்கிறது. மனு முடித்து வைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Nellai tamilan
மார் 12, 2025 13:19

ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் ஒரு பெந்தகோஸ்த் வழிபாடு செய்யமுடியாது. உருதுவில் தொழும் ஒரு பள்ளிவாசலில் அகமதிய இஸ்லாமியர் நுழைய முடியாது. ஏனென்றால் அது அவர்களின் மத வழக்கம். மதம் சார்ந்த / கோயில் சடங்குகள் சார்ந்த விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. மற்ற மதங்களின் வழிபாடுகளில் இவர்கள் மூக்கை நுழைப்பது இல்லை.


ponssasi
மார் 12, 2025 13:16

கோவிலை எந்த சாதியையும் சொந்தம் கொண்டாட முடியாது ஆனால் சில சாதிகள் தமிழகத்தையே சொந்தம் கொண்டாடுகிறதே? அரசு வேலை எங்களுக்கே என கொக்கரிக்கறதே? நீதிமான்களே கோவிலை கடந்து அரசு துறையையும் கொஞ்சம் கவனியுங்கள் இங்கு அனைவரும் சமம். அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கப் பெறவேண்டும் அதை செய்தால் தமிழகம் இன்னும் வீறு நடைபோடும். கோவிலுக்குள் சாதி மட்டும் வரக்கூடாது ஆனால் சாதி பார்த்துதான் பள்ளிகளில் சேரமுடியும், சாதிபார்த்துதான் வேலை கிடைக்கும், சாதிபார்த்துதான் ப்ரோமோஷன் கிடைக்கும் ஆனால் திருமணத்தின் பொது சாதிபார்க்கக்கூடாது, கோவிலுக்கு சாதிபார்க்கக்கூடாது என்பார்கள். தான் அனுபவிப்பது தனக்கு சாதகமான அணைத்து விஷங்களுக்கும் சாதிவேண்டும், அந்த சாதியால் பாகுபாடு காட்டும்போது மட்டும் சாதி இருக்கக்கூடாது என்பது என்ன நியாயம். அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் சாதியால் ஒருவன் அரசு வேலை மறுக்கப்படும் பொதுமட்டும் அவன் சாதிபார்க்கக்கூடாது என எதிர்பார்க்கக்கூடாது.


ram
மார் 12, 2025 12:54

அப்படியே இந்த சர்ச் mosque இதுபோல திட்டவட்டமாக இந்த நீதி மன்றங்கள் சொல்ல முடியுமா?


J swaminathan
மார் 12, 2025 07:26

Christian divisions are not based on e. The examples you sho are like saivam, vaishnavam etc. it is clear you fear about extension of this judgement to stop e domination to become priests. .


கடல் நண்டு
மார் 12, 2025 07:19

ஆபீசர், கோயிலுக்கு தரிசன கட்டணம் வசூலிப்பதில் கொள்ளை, மற்றும் பணக்காரர்கள் தரிசன சொந்தம் கொண்டாடுகிறார்ரகளே.. இதெல்லாம் நீதிபதிகள் ஏன் கண்டுகொள்வதில்லை?


Anand
மார் 12, 2025 10:25

இதெல்லாம் நீதிபதிகள் கண்டுக்கொண்டால் அவர்களும் பொதுவரிசையில் நிற்க நேரிடும், எனவே...


Svs Yaadum oore
மார் 12, 2025 07:03

ஹிந்து அற நிலையத்துறையில் மதம் மாற்றிகள் அவர்கள் மதத்தை மறைத்து பணியில் உள்ளார்கள். இங்குள்ள ஜாதி சங்கங்கள் அரசியல் கட்சிகள் ஜாதி அடிப்படையில் நீதி மன்ற நியமனங்கள். நீதி மன்ற பதவி நாங்கள் போட்ட .... என்று கூடத்தான் சொன்னான் .. அதற்கு என்ன செய்யலாம்.


pmsamy
மார் 12, 2025 06:33

religion and cast should be totally destroyed


nagendhiran
மார் 12, 2025 05:59

குறிப்பு இந்த சட்டம் இந்து கோவில்களில் மட்டும்தான் பொருந்தும்


Anand
மார் 12, 2025 10:27

ஆமாம், மற்ற மத விஷயங்களில் .....


sundarsvpr
மார் 12, 2025 05:45

திருக்கோயில்களில் நடைபெறும் எந்த நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் தலையிடக்கூடாது. காரணம் அரசியல் கட்சிகளில் மதம் குடும்பம் முன்னுரிமை தலை கட்டுகிறது. இது ஏற்புடையது என்றால் அரசில் மத மேம்பாட்டுத்துறை அவசியம் இருக்காது. .இப்போது நம்பிக்கையுள்ள இடம் நீதிமன்றம்தான். இதன் கட்டுப்பாட்டில் எல்லா மத திருக்கோயில்கள் கொண்டுவரவேண்டும்.


Kasimani Baskaran
மார் 12, 2025 03:49

சுத்த பயித்தியக்காரத்தனம்... இந்துமதத்தின் மீதான தாக்குதல்.. இதே பாணியில் எல்லா கிறிஸ்தவ சர்ச் கூட்டங்களும் பிந்தைய கோஸ்தே / பிராடஸ்டண்ட் / ரோமன் கத்தோலிக்க ஒன்று, யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று இவர்களால் சொல்ல முடியுமா?


Sampath
மார் 12, 2025 06:38

முடியாது . ஏன் என்றால் மற்ற மதங்களில் ஜாதி அங்கீகரிக்க பட்டது விவேகானந்தர் மற்ற மதங்களை பற்றி பேசவில்லை. உலக மஹா .....அரசர்கள்


புதிய வீடியோ