உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வினரை அதிகாரிகள் மதிப்பதில்லை மாஜி நிர்வாகி ஆதங்கம்; மா.செ., விளக்கம்

தி.மு.க.,வினரை அதிகாரிகள் மதிப்பதில்லை மாஜி நிர்வாகி ஆதங்கம்; மா.செ., விளக்கம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் நடந்த, தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், பல்வேறு குறைகளை கூறி முன்னாள் மாவட்ட செயலாளர் பேசியதும், அதற்கு அமைச்சர் முன்னிலையில், மாவட்ட செயலாளர் பதிலளித்து பேசியதும், பரபரப்பை ஏற்படுத்தியது.கிருஷ்ணகிரியில், தி.மு.க., கிழக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் பேசுகையில், ''கட்சியில் மூத்த நிர்வாகிகளுக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை. தி.மு.க.,வினரை, அதிகாரிகள் மதிப்பதில்லை. பல போராட்டங்கள் நடத்தி கிராமம், கிராமமாக சென்று கட்சியை வளர்த்தோம். ஆனால், எங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சிக்கு, என்னை அழைக்கவில்லை. மாவட்ட செயலாளர் எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும்,'' என, குற்றச்சாட்டுகளை கூறினார்.அதற்கு பதிலளிக்கும் வகையில், மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசுகையில், ''அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக, பல நிர்வாகிகள் புகாரளித்துள்ளனர். இது குறித்து, நாம் அமைச்சரிடம் கூறி, அதற்கான முடிவை எடுப்போம். அரசு உத்தரவின்படி படியும், சட்டப்படியும் தான், அதிகாரிகள் செயல்படுவர். இதில், அரசியல் தலையீடு கூடாது. நான் எல்லோருக்கும் பொதுவான நபராக இருக்க விரும்புகிறேன். அரசியலில், யாருக்கும் எப்பதவியும் நிரந்தரம் இல்லை. எந்த குறைகள் இருந்தாலும், என்னிடம் தெரிவிக்கலாம்,'' என்றார்.இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ''முக்கிய பொறுப்பாளர்கள் அமர்ந்து பேசி, இதுபோன்ற குறைகளுக்களுக்கெல்லாம் தீர்வு காண்போம்,'' என, மேடையில் நடந்த வார்த்தை மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.இதேபோல ஓசூரில், கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். மாநகர செயலாளரும், மேயருமான சத்யா வரவேற்றார். இதில், அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., பேசினர். நிகழ்ச்சியில் ஓசூரில் விமான நிலைய அறிவிப்புக்கு நன்றி தெரிவிப்பது, கருணாநிதி நுாற்றாண்டு நாணயம் வெளியீட்டில்கலந்து கொண்ட, மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட, 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி