உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

ஏப்ரல் 12, 1904 வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில் முருகப்ப முதலியார் -- மாணிக்கம்மாள் தம்பதியின் மகனாக, 1904ல் இதே நாளில் பிறந்தவர் சுவாமிநாதன் எனும் அண்ணல் தங்கோ. தொடக்கக் கல்வியை மட்டுமே முடித்த இவர், தன் சுயமுயற்சியால் பல மொழிகளை கற்றார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்.காங்கிரசில் இருந்து விலகி நீதிக்கட்சியில் சேர்ந்தார். திராவிடர் கழகம் உருவான போது அதில் இணைந்தார். நீதிக்கட்சியிலும், தி.க.,விலும், தமிழர் அடையாளங்கள் அழிக்கப்படுவதை எதிர்த்தார்.உலகத் தமிழ் மக்கள் தற்காப்பு பேரவையை துவக்கி, வேலுாரில் பொங்கல் விழா கொண்டாடி, தமிழறிஞர்களை பேச வைத்தார். தமிழர் உரிமை மாநாடுகளை நடத்தினார். 'தமிழ் நிலம்' பத்திரிகையை நடத்திய இவர், பராசக்தி, பெற்ற மனம், பசியின் கொடுமை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பல நுால்களை எழுதிய இவர்,1974, ஜனவரி 4ல் தன் 70வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V. Nagasubramanian
ஏப் 12, 2024 16:53

ஏன் இவர் பெயர் கூட வெளி வர வில்லை , திராவிட கழகத்தினர் இவரை இருட்டடிப்பு செய்து விட்டார்களா ?


மேலும் செய்திகள்











புதிய வீடியோ