இதே நாளில் அன்று
செப்டம்பர் 16, 1923சிங்கப்பூரின் செமராங்கில், சீன பூர்வீக குடிகளான லீ சின் கூன் - சுவா ஜிம் நியோ தம்பதியின் மகனாக, 1923ல், இதே நாளில் பிறந்தவர் லீ குவான் யூ.பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் போது பிறந்த இவர், ராபிள்ஸ், லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ், கேம்ப்ரிட்ஜ் பல்கலைகளில் படித்தார். சிங்கப்பூரில் வழக்கறிஞராக பணியாற்றிய இவர், சுதந்திரத்துக்கு பின், மக்கள் செயல் கட்சியை துவக்கி எதிர்க்கட்சி தலைவரானார்.சிங்கப்பூரை, பொருளாதார வல்லரசாக்கும் திட்டத்துடன், நேர்மையாக செயல்பட்ட இவர், நாட்டின் முதல் பிரதமர் ஆனார். இவரது செயல் திட்டங்களை வடிவமைக்க, தமிழர்களை தேர்ந்தெடுத்தார். காவிரி டெல்டா இளைஞர்களை அழைத்துச் செல்ல இலவச கப்பல் விட்டார். அவர்களை ஏற்றுமதி, இறக்குமதி வணிகர்கள், நிர்வாக பிரதிநிதிகளாக அங்கீகரித்தார்.சிங்கப்பூரை நவீனமாக்கிய தமிழர்களுக்கு வழிபாட்டு உரிமையை தந்தார். பாலதண்டாயுதபாணி, மகா மாரியம்மன், வீரமா காளியம்மன், முருகன் கோவில்களை கட்ட உதவி செய்தார். தமிழை ஆட்சி மொழியாக்கி, தமிழர்களுக்கு பெருமை சேர்த்தார். தன் 91வது வயதில், 2015 மார்ச் 23ல் மறைந்தார்.மன்னார்குடியில் சிலையாக நிற்கும், 'சிங்கப்பூரின் சிற்பி' பிறந்த தினம் இன்று!