உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊட்டி மலை ரயில் ரத்து கட்டணம் திரும்ப வழங்கல்

ஊட்டி மலை ரயில் ரத்து கட்டணம் திரும்ப வழங்கல்

சேலம்:ஊட்டி மலை ரயில் பாதையில், ஹில்குரோவ் - குன்னுார் இடையே கன மழையால், மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் ரயில் தடத்தில் விழுந்துள்ளன. இதனால் நேற்று காலை, 7:10 மணிக்கு புறப்படவிருந்த, மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் ரயில், மதியம், 2:00 மணிக்கு கிளம்பவிருந்த உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் முன்பதிவு செய்த பயணியரின் முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும். விழுந்த பாறை, மண் திட்டுகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை