| ADDED : மே 15, 2024 01:15 AM
சென்னை:உதவி பேராசிரியர்கள் பணிக்கான விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பினால், நாளை முதல் 19ம் தேதி வரை திருத்தம் செய்யலாம்.இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு:அரசு கலை அறிவியல் கல்லுாரிகள், கல்வியியல் கல்லுாரிகள் ஆகியவற்றில் உள்ள 4,000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய, மார்ச் 14ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 'ஆன்லைன்' வழியாக இன்று மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்புவோர், நாளை முதல் 19ம் தேதி மாலை 5:00 வரை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திருத்தம் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை சமர்ப்பித்து, தேர்வு கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர். விபரங்களை திருத்தம் செய்து புதுப்பித்ததும், கடைசி பக்கத்தில் உள்ள, 'சமர்ப்பி' பொத்தானை அழுத்தி, விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.