உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களே... ஒரு வாரம் மழை கொட்டி தீர்க்கப்போகுது! 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

மக்களே... ஒரு வாரம் மழை கொட்டி தீர்க்கப்போகுது! 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் ஒருவாரம் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம், அக்.15ம் தேதி சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கிறது. இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பதிவாகி இருக்கிறது. இந் நிலையில் அக்.15ம் தேதி சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு; தென் தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுபெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 13ம் தேதி மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.அக்.12, அக்.13ல் தமிழகத்தில் அனேக இடங்களிலும் திருப்பூர், கோவை, மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.அக்.14ல் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.அக்.15ல் சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்யும். அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Lion Drsekar
அக் 11, 2024 18:51

பாராட்டுக்கள் முதன் முறையாக உலக சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள செய்தி , மக்களை குழப்பாமல் எங்கு மழை பொழியும் என்று செய்தி வெளியிட்டத்த்ற்கு அதிகாரிகளுக்கு பாரத ரத்தின பட்டம் கொடுக்கவேண்டும் வந்தே மாதரம்


Pats, Kongunadu, Bharat, Hindustan
அக் 11, 2024 18:45

மேயருக்கு லிப்ஸ்டிக் போட்டுக்கவே நேரம் பத்தல. இதுல அவரு எங்க போட்டு விட்டு சென்னை மக்களை காப்பாத்துவாரு? உங்க ஊட்டுக்குள்ள மழத்தண்ணி வந்துச்சுன்னா மேயரு, கவுன்சிலரு அல்லாரையும் ஊட்டான்ட இஸ்துகினு போயி குளிப்பாட்டுங்கோ.


என்றும் இந்தியன்
அக் 11, 2024 18:25

காகித ஓடம் கடலலை மீது போவது போல நாமனைவரும் தயாராக இருப்போம், என்ன சரியா டாஸ்மாக்கினாட்டு "குடி"மக்களே. அதுக்கப்புறம் திருட்டு திராவிட அறிவிலி மடியில் அரசிடமிருந்து ஒரு உளறலோஉளறல் இப்படி வரும் "வெள்ள நிவாரண நிதி ரூ 66,000 கோடி கேட்டோம் ஒன்றிய மத்திய அரசை ஆனால் அவர்கள் வெறும் ரூ 450கோடி தான் கொடுக்கின்றார்கள் இது அக்கிரமம் அநியாயம் டாஸ்மாக்கினாட்டுக்கு ஒன்றிய அரசு வஞ்சனை செய்கின்றது. அப்புறம் வடிகால் எல்லாம் நாங்கள் சரிசெய்து விட்டோம் 99%??? அப்புறம் எப்படி வெள்ளம் வடிகாலில் செல்லாமலே வீடுகளில் புகுந்து செல்கின்றது?? இல்லை வடிகால் நிரம்பி வழிவதால் இவ்வளவு வெள்ளம் ?? அப்போ வடிகால் சரியான டிசைன் இல்லையா ?? இல்லை இல்லை வடிகால் மிக நல்ல design ஆனால் வெள்ள நீர் அதிகம் ஆகவே இப்படி நடக்கின்றது?? உண்மை என்ன "எதிர்பார்த்த கமிஷன் 65% ரூ 66,000 கோடிக்கு என்றால் குறைந்தது ஊ 40,000 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் இந்த ஒன்றிய அரசு வெறும் ரூ450 கோடி கொடுக்கின்றது அதில் 80% எடுத்துக்கொண்டால் கூட வெறும் ரூ 350 கோடி தானே கிடைக்கும் நாங்கள் எதிர்பார்ப்பது ரூ 40,000 கோடி


முக்கிய வீடியோ