வீட்டுமனை பட்டா முறைகேடு ரத்து செய்து உத்தரவு
சிவகங்கை,:திருப்புத்துார் அருகே சிறாவயலில் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே சிறாவயலில் வசிக்கும் ஆதிதிராவிடர்களுக்கு இலவச பட்டா வழங்குவதற்காக, 1 ஏக்கர் 8.5 சென்ட் நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறை வாங்கியுள்ளது.அங்கு வசிக்கும் ஆதிதிராவிடர்கள் சிலர் கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர். உண்மையான பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்காமல், ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் மற்றும் மூன்று பேர் சேர்ந்து தலா ஒரு பட்டாவிற்கு ரூ.20 ஆயிரம் வரை வசூல் செய்து, தகுதியில்லாத நபர்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கியதாக புகார் அளித்தனர்.தேவகோட்டை கோட்டாட்சியர் விசாரணைக்கு கலெக்டர் உத்தரவிட்டார். சம்பந்தப்பட நிலத்தில் எவ்வித விசாரணையும் இன்றி, ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் வைத்தே 24 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி மோசடி நடந்துள்ளதை கோட்டாட்சியர் கண்டறிந்தார். தகுதியில்லாத நபர்களுக்கு வழங்கிய பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து 24 பட்டாக்களை ரத்து செய்து, சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.