உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் பெற்ற ரூ.50 லட்சம் கடன் வட்டியுடன் செலுத்த உத்தரவு

நடிகர் பெற்ற ரூ.50 லட்சம் கடன் வட்டியுடன் செலுத்த உத்தரவு

சென்னை:தனியார் நிறுவன உரிமையாளரிடம் இருந்து பெற்ற, 50 லட்சம் ரூபாய் கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தும்படி, நடிகர் யூகி சேதுவுக்கு, சென்னை 19வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் யூகி சேது என்ற சேதுராமன், சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளரான ஆர்.சுரேஷ்குமார் என்பவரிடம், 2017ம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் கடன் கேட்டுள்ளார். ஆறு மாதங்களில் திருப்பி அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.இதை நம்பி, முதல் தவணையாக 20 லட்சம் ரூபாய், இரண்டாவது தவணையாக 10 லட்சம், 3வது தவணையாக 20 லட்சம் ரூபாய் என, யூகி சேதுவுக்கு சுரேஷ்குமார் வழங்கியுள்ளார். ஆனால், உறுதி அளித்தபடி யூகி சேது கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை.இதையடுத்து, யூகி சேதுவுக்கு எதிராக, சென்னை 19வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சுரேஷ்குமார் சார்பில், பொது அதிகாரம் பெற்ற அவரது மருமகன் அஸ்வினிகுமார் தலால், சிவில் வழக்கு தொடர்ந்தார்.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:கடன் தொகையை திருப்பி செலுத்தும்படி, மனுதாரரின் மகள், மருமகன், பொது அதிகாரம் பெற்ற அஸ்வினிகுமார் தலால் ஆகியோர், பலமுறை யூகி சேதுவிடம் கேட்டுள்ளனர். ஆனால், அவர் திருப்பி செலுத்துவதை தவிர்த்து வந்துள்ளார்.மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களில் உள்ள கையெழுத்து, யூகி சேது உடையது என்பது உறுதியாகியுள்ளது. எனவே, யூகி சேது தான் பெற்ற 50 லட்சம் ரூபாயை, 9 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

jayvee
மே 11, 2024 08:04

இந்தியாவில் நீதி என்பது குற்றவாளிகளை காப்பாற்றவே செயல்படுகிறது அதற்க்கு ஒரு விளக்கமும் கொடுப்பார்கள் ஒரு குற்றவாளி தண்டிக்கப்படாமல் போகலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று பல வழக்குகளில் குற்றம் செய்தவர்களுக்கு எதிராக தெளிவான சாட்சியங்கள் இருந்தாலும் குறிப்பாக இது போன்ற காசோலை வழக்குகளில், கீழமை நீதிமன்றங்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை வங்கிகள் , வக்கீல்கள் நீதிமன்றங்கள் என்று அனைவரும் சேர்ந்து வழக்கை பல ஆண்டுகள் இழுத்தடிக்கிறார்கள் இதனால் பாதிக்கப்படுவது ஏமாற்றப்பட்ட நபர்தான் எதற்கெடுத்தாலும் தெளிவாக அளவுக்கு அதிகமா சில நேரங்களில் பேசும் நீதி மான்கள் இதை ஏன் கண்டுகொள்வதில்லை ஒருவழக்கில் இரு தரப்பும் இரண்டு முறைக்கு மேல் வாய்தா போட அனுமதிக்கக்கூடாது காசோலை வழக்கை தனி சிறப்பு நீதிமன்றங்கள் வைத்து வாதாட வேண்டும்


sugumar s
மே 08, 2024 16:53

Are such loans are accepted on non-returnable basis???


Kasimani Baskaran
மே 04, 2024 07:31

இந்தியாவில் சதவிகிதத்தில் யார் கடன் கொடுக்கிறார்கள் என்பதை கேட்டுச்சொல்லவும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை