உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அரசுக்கு பழனிசாமி கண்டனம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அரசுக்கு பழனிசாமி கண்டனம்

சென்னை:'பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் பெண்கள் விடுதி அறையில், அங்கிருந்த மாணவி முன்பே, இணையதளம் பழுது பார்க்க வந்த நபர், பாலியல் ரீதியாக அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.இது குறித்து புகார் அளிக்கச் சென்ற மாணவியை, போலீஸ் நிலையத்தில் இழிவாகப் பேசியதாக தகவல்கள் வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண்களிடம், காவல்துறை இதுபோன்று நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.ஏற்கனவே சில நாட்களுக்கு முன், சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பெண்கள் கழிப்பறை பகுதியில், மாணவி ஒருவருக்கு வட மாநிலத் தொழிலாளரால் பாலியல் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.பெண்களுக்கும், சிறுமியருக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை, தொடர்ந்து சுட்டிக்காட்டியும், அரசு இதை அடக்க திராணியின்றி செயலற்று இருப்பதன் விளைவே, இதுபோன்ற சம்பவங்கள் வரிசையாக நடக்கின்றன.பெண்களுக்கு எதிரான குற்றங்களை தண்டிக்கும், 'நிர்பயா' சட்டத்தை, தமிழகத்தில் நிர்பயா சம்பவம் நடந்தால்தான் கையில் எடுக்கும் எண்ணத்தில், தி.மு.க., அரசு இருக்கிறதா? பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், புகார் அளிக்கும் பெண்களை கொச்சைப்படுத்த முயல்வதா?திருச்சி என்.ஐ.டி., நிறுவனத்தில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் மீது, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை