உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாராலிம்பிக்கில் பதக்கம் வீராங்கனையருக்கு பரிசு

பாராலிம்பிக்கில் பதக்கம் வீராங்கனையருக்கு பரிசு

சென்னை:பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நடந்த பாராலிம்பிக்ஸ் பாட்மிண்டன் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் வெள்ளி பதக்கத்தையும், மணிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சிவன் ஆகியோர் வெண்கல பதக்கங்களையும் வென்றனர். அவர்கள் தாயகம் திரும்பினர். தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, நேற்று அவர்களை அழைத்து, தலா, 50,000 ரூபாய்க்கான பரிசு கூப்பன்களை வழங்கி வாழ்த்தினார். நிகழ்வில், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை