மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 2
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
13 hour(s) ago
சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பகுதி நேர கலை ஆசிரியர்கள் பணிக்கு விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கல்லுாரி கல்வித்துறையின் கீழ் செயல்படும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பகுதி நேரமாக கலைகள் படிக்க விருப்பம் உள்ளவர் களுக்கு, தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில், வாரம் இரண்டு நாட்கள் பகுதி நேர கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.செவ்வியல் கலை, கிராமியக் கலை, கவின் கலை ஆகிய பிரிவுகளில், ஏதேனும் ஒரு கலையில் முதல்கட்டமாக, 100 கல்லுாரிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இக்கலை பயிற்சி அளிக்க, தொகுப்பூதியத்தில் கலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.குரலிசை, தேவாரம், மிருதங்கம், பரத நாட்டியம், ஓவியம், நவீன சிற்பம், கைவினை, கிராமிய பாடல், கரகம், தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை வடிவங்களில், 100 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.அவர்களுக்கு இரண்டு மணி நேர வகுப்புகளுக்கு, 750 ரூபாய் வீதம், மதிப்பூதியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 80 வகுப்புகள் நடத்த, தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படுவர். பகுதி நேர கலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ள கல்லுாரிகள், கல்லுாரி தேர்வு செய்துள்ள, கலை மற்றும் பயிற்சி நடக்க உள்ள நாள், நேரம், விண்ணப்பப் படிவம் போன்ற விபரங்களை, www.artandculture.tn.gov.inஇணையதளத்தில் வெளியிடப்பட்டுஉள்ளது.விருப்பம் உள்ள கலை ஆசிரியர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பகுதி நேரப் பணிக்கு வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
1 hour(s) ago | 2
12 hour(s) ago | 1
13 hour(s) ago