உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெயிலில் இருந்து தப்பிக்கணுமா மக்களே!: என்ன செய்யலாம்?

வெயிலில் இருந்து தப்பிக்கணுமா மக்களே!: என்ன செய்யலாம்?

சென்னை: வெயிலின் தாக்கம் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மக்களுக்கு சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. அவை பின்வருமாறு:* வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.* காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம்.* நீர்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.* அவசியமில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.* நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.* எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.* பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

மழைக்கு வாய்ப்பு

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று(ஏப்., 30) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் மே 6ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஏப் 30, 2024 20:48

வெயிலில் இருந்து தப்பிக்கணுமா மக்களே அப்ப ஒன்னு பண்ணுங்க, மாலத்தீவு போங்க


Ramesh Sargam
ஏப் 30, 2024 20:29

குளிர்ச்சியான கோதுமை பீர் கூட அருந்த கூடாதா??


தமிழ்வேள்
ஏப் 30, 2024 17:34

மது அருந்த கூடாது என்று பதில் டாஸ்மாக் ஐ கோடைகாலம் முழுவதும் மூடி சீல்வைத்து விடலாமே அதென்ன சும்மா வேண்டாம் வேண்டாம் என்று பாசாங்கு செய்வது ?


Palanisamy Sekar
ஏப் 30, 2024 14:24

நாங்க என்ன, நினைச்சா மாலத்தீவுக்கு போகுற பிளான் போட முடியுமா? டெல்லியிலிருந்து மிரட்டல் வந்ததுமே பிளானை மாத்தி கொடைக்கானலுக்குத்தான் போக முடியுமா? நீங்க சொல்றத அப்படியே கேட்டுக்குறோம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி