மேலும் செய்திகள்
நடிகர் ரஜினி கருத்துக்கு மக்கள் கருத்து
27-Aug-2024
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை எம்.பி., கூறியதாவது: பணம் கொடுத்து ஓட்டு பெறுவதற்கு முற்றுப்புள்ளி வேண்டும். அந்த மாற்றம் மக்களால் தான் வர வேண்டும். நல்ல வேட்பாளருக்கு ஓட்டளிக்கும் எண்ணம் வர வேண்டும். அப்போது தான் அரசியல் வாதிகளுக்கும், அரசியல் இயக்கங்களுக்கும் பயம் வரும். அரசியல்வாதிகளை, அரசு அதிகாரிகளை குறை சொல்லும் மக்கள் பணத்தை பெற்றுக்கொண்டு ஓட்டளிக்கும் போது கேள்வி கேட்கும் உரிமையை இழந்து விடுகின்றனர். கவர்னர் வலது சாரி சிந்தனையுடைய இயக்கத்தின் பிரசாரகராக உள்ளார். உதயநிதி துணை முதல்வரானால் சிறப்பாக செயல்படுவார். சினிமா வேறு, அரசியல் வேறு. அரசியலுக்கு வந்த அனைவரும் வெற்றி பெற்றிருக்கிறார்களா என சொல்ல முடியாது. 40 ஆண்டு காலமாக தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஏராளமானோர் பலியானதுடன் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் காக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
27-Aug-2024