உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரமோற்ஸவ ஏற்பாட்டை எதிர்த்து மனு

சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரமோற்ஸவ ஏற்பாட்டை எதிர்த்து மனு

சென்னை:சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோவிந்தராஜ பெருமாள் சன்னிதிக்கு, பிரமோற்ஸவம் நடத்த அறநிலையத்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னை மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனு: சிதம்பரம் நடராஜர் கோவிலில், விநாயகர், விஷ்ணு, முருகன் சன்னிதிகள் உள்ளன. விஷ்ணு சிலைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் வரை பொது தீட்சிதர்கள் பூஜை செய்து வந்தனர். 1539ம் ஆண்டில் கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி கட்டப்பட்டது.தமிழகத்தில் நுாற்றுக்கணக்கில் சிவன் கோவில்கள் உள்ளன. அங்கு, விஷ்ணு சன்னிதியும் உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமோற்ஸவம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள், சடங்குகள் நடக்கும். கோவிந்தராஜ சன்னிதிக்கு என கோவிலில் சிறிது இடம் உள்ளது. 90 சதவீத பக்தர்கள், நடராஜரை தரிசிப்பதற்காகவே வருவர்.கோவிந்தராஜ பெருமாளுக்கான விழாக்கள், சடங்குகள் பட்டியல் 1920ல் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் இடம் பெற்றுள்ளது. கோவிந்தராஜ பெருமாள் சன்னிதிக்கு பிரமோற்ஸவம் நடத்த ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்த மனு, நிலுவையில் உள்ளது.இந்நிலையில், கடந்த பிப்ரவரி 18ல் அறநிலையத் துறை இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவில், 'கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் மே 20 முதல் 29 வரை பிரமோற்ஸவம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மார்ச் 13ல் நடக்க உள்ளது. நிர்வாக அறங்காவலர்கள், பொது தீட்சிதர்கள் செயலர் ஆஜராகவும், தவறினால் ஆட்சேபனை இல்லை என கருதி பிரமோற்ஸவம் நடத்துவது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.இணை ஆணையரின் இந்த உத்தரவு, கோவில் சடங்கு, வழிபாட்டு முறையில் குறுக்கிடுவது போலாகும். 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இல்லாத ஒரு விழாவை கொண்டாட உத்தரவிடுவதற்கு, இணை ஆணையருக்கு அதிகாரம் இல்லை. உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், ''நீதிமன்ற உத்தரவு படி மே மாதம் பிரமோற்ஸவம் நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. பிரமோற்ஸவத்துக்கு எதிர்த்து, 1983ல் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது,'' என்றார்.கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்களை பிரதிவாதிகளாக சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.29க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி